Tuesday, January 30, 2024
கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச்சிறுவன்
கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச்சிறுவன் மணி எங்கே என்ற என் பதிவில் “அண்ணன் கௌத்தூர் மணி பற்றி நாக்பூர் தம்ளர் கட்சிக்காரர் தெரிய வாய்ப்பில்லை” என்று எழுதியுள்ளார் ஒரு உடன்பிறப்பு.
அகதிச் சிறுவன் மணிக்கும் கௌத்தூர் மணிக்கும்கூட வித்தியாசம் தெரியாத நிலையில் இருக்கும் உடன்பிறப்பு.
சிறுவன் மணி ஒரு ஈழத் தமிழன். நானும் ஒரு ஈழத் தமிழன். ஒரு ஈழத் தமிழன் காணவில்லை என்றால் இன்னொரு ஈழத் தமிழன்தானே கேட்க வேண்டும்.
அவ்வாறு கலைஞர் தத்தெடுத்த அந்த சிறுவண் மணி எங்கே என்று கேட்டால் கௌத்தூர் மணி பற்றி எனக்கு தெரியாது என்கிறார்.
நான் கௌத்தூர் மணியுடன் சென்னை சிறையில் ஒன்றாக இருந்ததை இந்த உடன்பிறப்பு அறியவில்லை போலும்.
அதுகூடப் பரவாயில்லை, ஈழத் தமிழனான என்னை நாக்பூர் தம்ளர் கட்சிக்காரன் என்று முத்திரை குத்தல் வேற.
பெரியார்தான் தமிழ்நாட்டிற்கு கல்வியறிவு தந்தார் என்கிறார்கள். இதுதானா பெரியார் தந்த திராவிட அறிவு?
விளங்கிடும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment