Monday, January 22, 2024
நேற்றைய தினம் கிளிநொச்சியில்
நேற்றைய தினம் கிளிநொச்சியில் இருந்து ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டார்.
இந்தியாவில் இருக்கும் தன் நண்பர் வடக்கு கிழக்கில் சீன முதலீடுகள் பற்றிய விபரம் கேட்கிறார் என்றார்.
அந்த நண்பர் ஏன் இந்த விபரங்களை கேட்கிறார் என்று நான் கேட்டேன்.
அதற்கு “பெரிய துரை கேட்கிறார். தேவையான பணம் தருவதாக கூறுகின்றார்” என்று தன் நண்பன் கூறியதாக சொன்னார்.
ஒரு உளவுதுறை அதிகாரியையே "பெரிய துரை" என்று அந்த நண்பர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது. இலங்கையில் இருக்கும் நாலு இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இந்த விபரங்கள் தெரியாதா என கேட்டேன்.
சிங்கள அரசு இந்திய அரசுக்கு தெரியப்படுத்தி இந்திய அரசின் சம்மதம் பெற்ற பின்பே சீன அரசுடன் ஒப்பந்தங்கள் செய்கின்றன.
இந்திய அரசுக்கு தெரியாமல் ஒரு ரூபாய்கூட சீனா இலங்கையில் முதலீடு செய்ய முடியாது.
இது தெரியாமல் நம்மவர்கள் சிலர் “சீனா வந்து விட்டது. இந்தியாவுக்கு ஆபத்து” என்று இந்தியாவுக்கு சொல்லுகின்றனர்.
யாழ்ப்பாணம் வந்த சீன தூதர் “பைனாகுலர் மூலம் இந்தியாவை பார்த்துவிட்டார். எனவே இந்தியாவுக்கு ஆபத்து” என்கின்றனர்.
பைனாகுலர் மூலம் என்ன தெரியும்? அப்படி பார்க்க விரும்பினால் செய்மதி மூலம் சீனாவால் பார்க்க முடியும்.
அல்லது எல்லையில் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து பார்க்க முடியும் என்பதுகூட இந்த அரசியல் அறிஞர்களுக்கு தெரியவில்லை.
இந்திய உளவுப்படையினரின் நோக்கம் சீனா பற்றி அறிவது அல்ல. மாறாக இத்தகையவர்களை பயன்படுத்தி தமிழ்த் தேசிய அரசியலைக் குழப்புவதே உண்மையான நோக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment