Monday, January 22, 2024
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாட்டில் இன்று மலையக தியாகிகள் நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.
மலையக மக்களின் விடுதலைக்காக இதுவரை பலர் போராடி உயிர் நீத்துள்ளனர்.
இதில் கரவெட்டியில் பிறந்து மலையகத்தில் சென்று போராடியவேளை இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்ட தோழர் நெப்போலியன் தியாகம் குறிப்பிடத்தக்கது.
1983ற்கு பின்னர் பல மலையக இளைஞர்கள் வடக்கு கிழக்கிற்கு வந்து போராளி இயக்கங்களில் இணைந்து போராடினார்கள்.
ஆனால் நெப்போலியன் மலையகம் சென்று “மலையக மக்கள் விடுதலை முன்னணி” என்ற அமைப்பை உருவாக்கி அதில் மலையக இளைஞர்களை இணைத்து போராட வைத்தார்.
அப்போது மலையகத்தில் தொண்டமான் குடும்ப அரசியலுக்கு அஞ்சி பலரும் போராட்டத்தில் பங்கெடுக்க தயங்கினர்.
அவ்வேளையில் ( முன்னாள் அமைச்சர்) சந்திரசேகரன் போன்றவர்களை இணைத்து அவர்களுக்கு தைரியம் கொடுத்தவர் நெப்போலியன்.
இவ்வேளையில் இந்தியாவில் தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன் குழுவினருக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து உதவியதற்காக இந்திய உளவுப்படையால் தோழர் நெப்போலியன் கொல்லப்பட்டார்.
ஈழத்து தமிழ்த்தேசிய விடுதலைக்கு மட்டுன்றி தமிழக தமிழ்த்தேசிய விடுதலைக்கும் பங்காற்றிய தோழர் நெப்போலியன் தியாகம் மகத்தானது.
என்றும் நினைவு கூரப்பட வேண்டியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment