•லண்டனில் கொண்டாடப்பட்ட 28 வது வீரமக்கள் தினம்!
நேற்றைய தினம் ( 22.07.17) லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் புளட் அமைப்பினரால் 28 வது வீரமக்கள் தினம் கொண்டாடப்பட்டது.
விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் உயிரை ஆகுதியாக்கிய அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வாக இடம்பெற்றது.
புளட் இயக்கத்தினரால் நடத்தப்பட்டாலும் மரணமடைந்த புளட் இயக்க போராளிகளுக்கு மட்டுமன்றி அனைத்து இயக்க போராளிகளும் நினைவு கூரப்பட்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
மரணமடைந்த போராளிகள் மட்டுமன்றி தம் உயிரை ஆகுதியாக்கிய பொது மக்களும் நினைவு கூரப்பட்டது நல்லதொரு அம்சமாகும்.
எதிர்காலத்தில் தமிழ் மக்கள் மரணமடைந்த போராளிகள் அனைவருக்கும் ஒன்றாக அஞ்சலி செலுத்துவதற்கான ஆரம்பத்தை இவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.
இவர்களுடைய இந்த முயற்சி தமிழ் மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது. பாராட்டுக்கள்.
குறிப்பு- ஒருபுறம் ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதிகள் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கூறிக்கொண்டிருக்க மறுபுறத்தில் ஆயுதம் தாங்கி மரணித்த போராளிகளுக்கு முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஸ்டீபன் அஞ்சலி செலுத்தினார்.
No comments:
Post a Comment