•கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆயுள்தண்டனை!
எப்படி நல்லிணக்கம் ஏற்படுத்தப் போகிறார்கள்?
எப்படி நல்லிணக்கம் ஏற்படுத்தப் போகிறார்கள்?
40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களை கொன்றவர்களுக்கு இன்னும் தண்டனை வழங்கவில்லை.
தண்டனை மட்டுமல்ல இவர்கள் மீது விசாரணையே இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. விசாரணை நடைபெறுமா என்பதுகூட தெரியவில்லை.
ஆனால் கட்டாய ஆட்சேர்ப்பு செய்ததாக முன்னாள் போராளி கண்ணதாசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முதலாவது, இவர் தலைமை கிடையாது. எனவே கட்டாய ஆட்சேர்ப்பு செய்யும்படி இவர் உத்தரவு இட்டிருக்க முடியாது.
இரண்டாவது, தலைமை இட்ட உத்தரவையே ஒரு போராளி என்ற நிலையில் இவர் நிறைவேற்றியிருக்க முடியும்.
மூன்றாவது, கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆயுள் தண்டனை என்பது அதிக பட்ச தண்டனையாகும் எந்த நாட்டிலும் இப்படி ஒரு தண்டனை வழங்கியது கிடையாது.
நான்காவது, இவர் ஒரு போராளியாக இருந்தமையினாலே சித்திரவதை முகாம் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டே விடுதலை செய்யப்ட்டிருக்கிறார். எனவே இவருக்கு மீண்டும் தண்டனை வழங்குவது தவறாகும்.
ஒரு குற்றத்திற்கு இரண்டு முறை தண்டனை வழங்குவதன் மூலம் எப்படி இலங்கை அரசு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்?
இந்த தீர்ப்பின் மூலம் புனர்வாழ்வு பெற்ற 12 ஆயிரம் போராளிகள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.
இவர்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் பயத்துடனேயே கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு தமிழ் தலைவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
குறிப்பிட்ட முன்னாள் போராளி கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும். இல்லையேல் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment