•பொலிசார்,
இம்முறை ஏன் வானத்தை நோக்கி சுடவில்லை?
சுட்டிருந்தால் கொலையாளி செத்திருப்பானே!
இம்முறை ஏன் வானத்தை நோக்கி சுடவில்லை?
சுட்டிருந்தால் கொலையாளி செத்திருப்பானே!
கடந்த வருடம் மோட்டார் சயிக்கிளில் வந்த இரண்டு பல்கலை மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அப்போது, தாங்கள் வானத்தை நோக்கி சுட்டதாகவும் ஆனால் தவறுதலாக மாணவர்களில் பட்டு இறந்து விட்டார்கள் என்று பொலிசார் கூறினர்.
கடந்த மாதம் வடமராட்சி துன்னாலையில் வெளிநாட்டில் இருந்து வந்த தமிழ் இளைஞன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அப்போதும், தாங்கள் வானத்தை நோக்கி சுட்டதாகவும் அது தவறுதலாக இளைஞன் மீது பட்டு இறந்து விட்டான் என்று பொலிசார் கூறினர்.
இப்போது, பொலிஸ் ஒருவரை சுட்டுக் கொன்றது மட்டுமன்றி நீதிபதி இளஞ்செழியன் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு ஒருவன் தப்பியோடி யிருக்கிறான்.
அந்த கொலையாளி மீது அதாவது வழக்கும்போல் ஏன் பொலிசார் வானத்தை நோக்கி சுடவில்லை?
வானத்தை நோக்கி சுடாதது மட்டுமன்றி கொலையாளியின் இலக்கு நீதிபதி இளஞ்செழியன் அல்ல என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டுள்ளனர்.
கொலையாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. விசாரணை இன்னும் முடியவில்லை.
ஆனால் அதற்குள் அதுவும் 24 மணி நேரத்திற்குள் “இலக்கு நீதிபதி இல்லை” என்று ஏன் அறிக்கை விட வேண்டும்?
கொலையாளி புங்குடுதீவைச் சேர்ந்தவர் என்பதும் அவர் வித்யா கொலையாளி சுவிஸ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.
பணத்தால் வாங்க முடியாத நீதிபதி இளஞ்செழியனை துப்பாக்கியால் மிரட்டி பணிய வைக்க முற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் இது விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதாவது சுவிஸ் குமாரின் பணம் இந்த கொலையாளிக்கும் பாய்ந்துள்ளதா என்று அறியப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், “போதையில் தகராறு செய்த ஒரு இளைஞன் நடத்திய துப்பாக்கி சூடு இது. அவன் இலக்கு நீதிபதி இளஞ்செழியன் அல்ல” என்று அவசரமாக அறிக்கை விட்டிருப்பது பலத்த சந்தேகம் தருகிறது.
ஏனெனில் பொலிஸ் உதவி அதிகாரி சிறீகஜனை கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.
அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதை ஆராய்ந்தால் நீதிபதி மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததின் பின்னணியும் தெரியவரும்.
No comments:
Post a Comment