வரிகளற்ற ஒரு அரசு சாத்தியமா?
இந்தியாவில் நள்ளிரவில் GST என்னும் நாடுதழுவிய வரி முiறையை இந்திய அரசு அமுல் படுத்தியுள்ளது.
நள்ளிரவில் வரி விதிப்பை அமுல்படுத்தியது மட்டுமன்றி மக்கள் மீது வரி விதிப்பு செய்தமையை “புதிய இந்தியா பிறந்து விட்டது” என்று கூறும் முட்டாள்தனம் உலகில் இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிறது.
எந்த ஒரு அரசாக இருந்தாலும் மக்களிடமிருந்து ஏதோவொரு வடிவத்தில் வரி பெற்றுக்கொள்கிறது. வரி பெற்றுக்கொள்ளாத அரசு உலகில் இல்லை.
உலக அளவில் ஒரு மனிதன் பெறும் ஒரு ரூபா வருமானத்தில் சராசரியாக 28 சதம் பல்வேறு வடிவங்களில் வரியாக அரசு பெறுகிறது.
பிரித்தானியாவில் சராசரியாக இது ஒரு பவுண்ட் வருமானத்தில் 32 பென்ஸ் வரியாக அறவிடப்படுகிறநது.
இந்த அதிக வரிவிதிப்பை சுட்டிக்காட்டினால் ஜரோப்பாவில் வரி குறைந்த நாடு பிரித்தானியா என்று அவ் அரசு நியாயம் கூறுகிறது.
ஆனால் அதேவேளை மக்களுக்கு ஒரு ரூபா வழங்கப்படும்போது இறுதியில் மக்களுக்கு 40 சதமே சென்றடைகிறது. இந்த 40 சதம் மக்களுக்கு சென்றடைய அரசு நிர்வாக செலவாக 60 சதம் செலவாகிறது.
மக்களுக்காக அரசு என்ற நிலைபோய் இப்போது அரசுக்காக மக்கள் என்ற நிலை வந்துள்ளது.
உலகில் அரசு இருக்கும்வரை வரிகள் இருக்கும். எனவே வரிகளற்ற அரசு என்பது சாத்தியம் இல்லை.
ஆனால் அரசு அற்ற சமூகம் என்பது சாத்தியம். கம்யுனிச சமூகத்தில் அரசு இருக்காது. அரசு வாடி உதிர்ந்துவிடும் என்றார் கால் மாக்ஸ்.
ஆம். அரசு அற்ற அந்த கம்யுனிச சமுதாயம் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
No comments:
Post a Comment