•உடமைகளை இழந்தோம்
உயிர்களை இழந்தோம்
ஆனால் உணர்வினை இழக்கவில்லை.
உயிர்களை இழந்தோம்
ஆனால் உணர்வினை இழக்கவில்லை.
ஆம். இது ஆறுதல் தரும் செய்தி. அதுமட்டுமல்ல நம்பிக்கை தரும் செய்தியும்கூட.
ஊனமுற்ற முன்னாள் போராளி ஒருவர் நயினாதீவு அம்மன் கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் அவலத்தை வெளியிட்டிருந்தோம்.
செய்தி வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் இப் போராளி இனம் காணப்பட்டு அவருக்கு உதவிகள் சென்றடைந்துள்ளது.
தமிழ் இனத்தில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கிறார். பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மாகாண அமைசர்கள், உறுப்பினர்கள் கூட பலர் இருக்கிறார்கள்.
ஆனால் மக்களால் தெரிவு செயய்ப்பட்ட இப் பிரதிநிதிகளில் ஒருவர்கூட இந்த முன்னாள் போராளிக்கு உதவ முன்வரவில்லை.
பதவி பெற்றதும் 5 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் வாங்குவதில்தான் அவர்கள் அக்கறை காட்டுகிறார்களேயொழிய மக்கள் மீது காட்டுவதில்லை.
தலைவர்கள் கைவிட்டாலும் மக்கள் தங்கள் உணர்வை ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதை காட்டியுள்ளார்கள்.
இந்த உணர்வு நம்பிக்கை தருகிறது. தமிழன் மீண்டும் எழுந்து நிற்பான் என்பதை மட்டுமல்ல முன்னைவிட பலமாக எழுந்து நிற்பான் என்பதை காட்டுகிறது.
இதோ அந்த போராளிக்கு உதவி செய்த உணர்வாளர் தந்த அறிவித்தல்,
"தற்போது எங்கள் சகோதரன் இசையின்பன் அண்ணாவை Tamil people's Aidஇன் பணிப்பாளர் Eng:க.அனித்தன் மற்றும் திட்ட இணைப்பாளர் தி.பிரணீவ் ஆகிய நானும் நேரடியாக சென்று அவரை மீட்டெடுத்துள்ளோம்.என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தயவுசெய்து இனி இசையின்பன் அண்ணா எங்கள் பாதுகாப்பில் (Tamil peoples aid) இருப்பார் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றேன். நன்றி
இவ்வண்ணம் தி.பிரணவன்(பிரணீவ்) திட்ட இணைப்பாளர் Tamil people's Aid. +94776188651
பதிவு அறிவிப்பாளர் முல்லையூர் பிரணீவ்"
No comments:
Post a Comment