•அமைச்சர் ரிசாத்
பதவி விலக வேண்டும் அல்லது
பதவி விலக்கப்பட வேண்டும்!
பதவி விலக வேண்டும் அல்லது
பதவி விலக்கப்பட வேண்டும்!
அமைச்ர் ரிசாத் பொறுப்பு வகிக்கும் சதோச நிறுவனத்தில் இறக்குமதி செயய்ப்ட்ட சீனியினுள் 3200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பெரிய தொகையான கொக்கேயின் போதைப் பொருள் கடத்தல் இது.
அமைச்சரின் ஒத்துழைப்பினூடாகவே இந்தளவு பெறுமதியான போதைப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறது.
எனவே இது குறித்து நீதியான விசாரணை நடைபெற வேண்டுமாயின் அமைச்சர் ரிசாத் பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும்.
அதுமட்டுமன்றி மிகவும் குறுகிய காலத்தினுள் அமைச்சர் ரிசாத் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகளுக்கு அதிபதியாக இருக்கிறார்.
கனடாவில்கூட பினாமி பெயரில் அவருக்கு சொத்துக்கள் இருப்பதாக அறியப்படுகிறது.
இந்தளவு சொத்துக்கள் இந்தளவு குறுகிய காலத்தில் நிச்சயம் நேர்மையாக சம்பாதித்திருக்க முடியாது.
எனவே கண்டு பிடிக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தலில் அவர் சம்பந்தப்பட்டிருக்லாமோ என்பது நியாயமான சந்தேகமே.
ஆனால் அவரோ புத்தமத இனவாதிகள் வேண்டுமென்றே தன்மீது பழி சுமத்தவதாக சொல்லி தப்பிக்க முனைகிறார்.
இவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முஸ்லிம் இனப் போர்வையைப் பயன்படுத்த முனைவதை முஸ்லிம் மக்கள் அனுமதிக்கக்கூடாது.
உண்மையிலே அவருக்கு இந்த போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தம் இல்லையென்றால் தானாக பதவி விலகி நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முஸ்லிம் மக்கள் வலியுறுத்த வேண்டும்.
அத்துடன் தனது சொத்து விபரம் முழுவதையும் சமர்ப்பித்து அவை எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதையும் அவர் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோர வேண்டும்.
வடமாகாண சபையில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் மக்கள் போராடியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அமைச்சர் ரிசாத் மீது நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி தமிழ் சிங்கள அனைத்து மக்களும் வலியுறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment