Sunday, July 23, 2017

வந்தார்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள் திரும்பிச் செல்கிறார்கள்!

•வந்தார்கள்
போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்
திரும்பிச் செல்கிறார்கள்!
பாரதீயஜனதாக் கட்சியின் தமிழக பொறுப்பாளர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் திடீரென இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் மகாண முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை எல்லாம் சந்தித்துள்ளார். சந்திப்பு குறித்த போட்டோக்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
மகாணசபை முதலமைச்சருடன் தான் அரசியல் பேசவில்லை என்று தமிழிசை கூறியுள்ளார். அவருக்கு தான் எழுதிய புத்தகம் பரிசாக வழங்கியதாக கூறியுள்ளார்.
முதலமைசசருக்கு புத்தகம் வழங்குவதற்காக பிரதமர் மோடியின் கட்சியின் தமிழக பொறுப்பாளர் யாழ் விஜயம் செய்தாரா?
இரு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் விஜயம் செய்த இந்திய தூதுவரும் தான் மகாணசபை முதலமைச்சருடன் அரசியல் பேசவில்லை என்றே கூறினார்.
தமிழிசையின் மாநில பொறுப்பாளர் பதவி பறிபோக இருப்பதாகவும் அதனைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே அவர் யாழ் விஜயம் என்ற ஸ்டண்ட் அடிப்பதாக அறிய வருகிறது.
இதுபுரியாமல் நம்மவர்கள் சிலர் இலங்கை அரசுக்கு எதிராக மோடியின் விளையாட்டு ஆரம்பித்து விட்டது என்றும் அதன் ஒரு அங்கமே இவரின் யாழ் விஜயம் என்று கூறித் திரிகிறார்கள்.
அதுமட்டுமல்ல விரைவில் காஞ்சி ஜெயயேந்திர சுவாமிகள் தனி விமானத்தில் யாழ் வர இருப்பதாகவும் அதன் பின்னர் இந்துக்களுக்காக நேரடியாக இந்தியா தலையிடும் என்று வேற கதை கூறுகின்றனர்.
இந்தியாவில் இருந்து யார் வந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பே அதிகரிக்கும்.
குறிப்பு- முடியுமென்றால் தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி யாராவது தமிழிசையிடம் கூறவும்.

No comments:

Post a Comment