Sunday, July 23, 2017

•திருமுருகன்காந்தி நீ ஒரு பையித்தியக்காரன்?

•திருமுருகன்காந்தி
நீ ஒரு பையித்தியக்காரன்?
நாங்களே முள்ளிவாய்க்காலை மறந்து விட்டோம்
ஆனால் நீ படுகொலை செய்யப்பட்ட
எமது உறவுகளுக்காக அஞ்சலி செய்ய முயன்று
சிறையில் அடைபட்டுக் கிடக்கிறாய்
ஏனெனில்
நீ ஒரு பையித்தியக்காரன்
நாங்கள் எமது குடும்பத்துடன் கடந்த வாரம்
ஏ.அர் ரகுமான் கச்சேரி பார்த்து ரசித்தோம்
ஆனால் நீயோ எமக்காக சிறையில் கிடக்கிறாய்
ஏனெனில்
நீ ஒரு பையித்தியக்காரன்
நாங்கள் அடுத்த மாதம் சன்னி லியோனுடன்
ஒரே மேசையில் டின்னர் சாப்பிடப் போகிறோம்
ஆனால் நீயோ எமக்காக
உன் அழகான மனைவியை பிரிந்து
உன் செல்லக் குழந்தையை பிரிந்து
உன் வயதான தந்தையைப் பிரிந்து
உன் தொழில் வருமானத்தை இழந்து
குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் கிடக்கிறாய்
ஏனெனில்
நீ ஒரு பையித்தியக்காரன்
நாங்கள்சன்னி லியோனுடன்
டின்னர் சாப்பிடப் போகிறோம்
உனக்காக நாம் நினைக்காவிட்டாலும்
எமக்கா நீ போராடுவாய் என்று தெரியும்
ஏனெனில்
நீ ஒரு பையித்தியக்காரன்
நீ வெளியில் இருந்திருந்தால்
இந்நேரம் உன் குரல் கதிரமங்களத்தில் ஒலித்திருக்கும்
ஏனெனில்
நீ ஒரு பையித்தியக்காரன்.
தமிழ் மீதும்
தமிழ் இனத்தின் மீதும்
நீ கொண்ட பையித்தியம்
மாறாமல் தொடர்ந்து இருக்க வேண்டும்
ஏனெனில்
நாங்கள்ஒரு சுயநல தமிழன்.
லண்டன் தமிழன்

No comments:

Post a Comment