வித்யா கொலை வழக்கு
எழுதி வைத்திருக்கும் தீர்ப்பிற்காக
விசாரணை நாடகம் நடக்கிறதா?
எழுதி வைத்திருக்கும் தீர்ப்பிற்காக
விசாரணை நாடகம் நடக்கிறதா?
எதிரி சுவிஸ்குமார் தப்புவதற்கான தீர்ப்பு எழுதப்பட்டு அதற்கான விசாரணை நாடகம் நடக்கிறதோ என சந்தேகம் எழுந்துள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய்க்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமையவே வித்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
கூட்டாக பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்டது வீடியோவாக எடுக்கப்பட்டு அது உடனடியாக வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் சூத்திரதாரி எதிரி சுவிஸ் குமார். இவரை பொலிசார் தேடிய போது இவரைக் காப்பாற்றுவதற்காக உடன் யாழ் சென்றவர் சட்டப் போராசிரியர் வி.ரி. தமிழ்மாறன்.
தேடப்படும் குறற்வாளியான சுவிஸ் குமாரை மறைத்து வைத்தது, அவர் கொழும்பு தப்பிச் செல்ல உதவியது போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட வேண்டியவர் இந்த தமிழ்மாறன்.
அவர் கைது செயய்ப்படாதது மட்டுமன்றி அவர் சுவிஸ்குமாரைக் காப்பாற்றுவதற்காக நீதிமன்றில் ஏறி பொய் சாட்சி சொல்லவும் முனைந்துள்ளார்.
ஆனால் நல்லவேளையாக நீதிமன்றம் அவரது சாட்சியத்தை ஏற்க மறுத்துவிட்டது. இலங்கை வரலாற்றில் ஒரு சட்டப்; பேராசிரியரின் சாட்சியத்தை எற்க மறுத்pருக்கும் கேவலம் இதுவே முதல் முறையாகும்.
விசாரணையின் போது விசாரணை பொலிஸ் அதிகாரிக்கே இரண்டு கோடி ரூபா லஞ்சம் கொடுக்க முனைந்தவர் இந்த சுவிஸ் குமார்.
தனக்காக பொய் சாட்சி சொல்லி , ஆரம்பம் முதல் தன்னை காப்பாற்ற முயலும் சட்டப்பேராசிரியர் தமிழ்மாறனுக்கு எத்தனை கோடி ரூபாய்க்களை சுவிஸ் குமார் வழங்கியிருப்பார்?
ஏனெனில் இந்த பேராசிரியர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர். இவரது செல்வாக்கின் காரணமாகவே சம்பந்தர் சுமந்திரன் ஆகியோர் இவ் வழக்கு குறித்து வாய் திறக்காமல் இருக்கின்றனர்.
அதுமட்டுமல்ல யாழ் சென்று வித்யாவின் தாயை சந்தித்து விரைவில் நீதி கிடைக்க வழி செய்வேன் என வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி மைத்திரியும் மௌனமாக இருப்பதற்கும் இப் பேராசிரியரே காரணம் என்கிறார்கள்.
சுவிஸ்குமார் காப்பாற்றப்படுவதற்கான தீர்ப்பு தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றும் அதற்கான விசாரணை நாடகமே தற்போது நடைபெறுகிறது என்றும் விபரம் அறிந்தோர் கூறுகிறார்கள்.
அப்படியென்றால், பணம் இருந்தால் யாரையும் பாலியல் வல்லுறவு செய்யலாமா? யாரையும் கொலை செய்யலாமா? அதை வீடியோ எடுத்து விற்கலாமா? இத்தனையும் செய்துவிட்டு பணம் கொடுத்து தப்பலாமா?
இதுதான் தீர்ப்பு என்றால், இதுதான் நீதி என்றால் இனி ஏழைப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
No comments:
Post a Comment