•அமைச்சர் விஜயகலாவுக்கும் பாய்ந்த சுவிஸ்குமார் பணம்?
பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். அது எந்தளவு உண்மை என்று தெரியாது. ஆனால் சுவிஸ் குமார் பணம் அமைச்சர் விஜயகலா வரைக்கும் பாய்ந்துள்ளது.
சுவிஸ் குமாரின் கோடிக் கணக்கான பணம் பல உயர் மட்டங்கள் வரை பாய்ந்துள்ளதால் மாணவி வித்யாவுக்குரிய நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.
• நடந்தது என்ன?
மாணவி வித்யா படுகொலையின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் மக்களால் பிடிக்கப்பட்டு மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டார்.
அமைச்சர் விஜயகலா கேட்டுக்கொண்டதால் யாழ் பிரதி பொலிஸ் மாஅதிபர் குற்றவாளி சுவிஸ்குமாரை தப்ப வைத்தார்.
குற்றவாளி சுவிஸ்குமாரை சட்டப் பேராசிரியர் தமிழ்மாறன் தன் காரில் ஏற்றிச் சென்றார். இதற்கு பொலிஸ் அதிகாரி சிறீகஜன் உதவி புரிந்தார்.
• நடப்பது என்ன?
குற்றவாளி சுவிஸ்குமார் தப்பி செல்ல உதவி புரிந்தமைக்காக பிரதி பொலிஸ் மாஅதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குற்றவாளி சுவிஸ்குமாருக்கு உதவி புரிந்த பொலிஸ் அதிகாரி சறீகஜன் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு-
(1) அமைச்சர் விஜயகலா வின் அழுத்தத்தினாலே தான் சுவிஸ் குமார் தப்ப உதவியதாக சிறையில் அடைக்கப்ட் பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறியுள்ளார்.
(2) தேடப்படும் குற்றவாளியை தன் காரில் ஏற்றிச் சென்ற சட்டப் பேராசிரியர் தமிழ்மாறன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
(3) சட்டப் பேராசிரியர் தமிழ்மாறன் பொய் சாட்சியத்தை நீதிமன்றம் நிராகரித்த பின்பும்கூட அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
• நடக்கப்போவது என்ன?
அமைச்சர் விஜயகலா மீதும் சட்டப் பேராசிரியர் தமிழ்மாறன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.
மாறாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு உயிருக்கு ஆபத்து என்ற போர்வையில் விடுதலை செய்யப்படுவதற்கான டீலிங் நடக்கிறது.
விசித்திரம்!
ஒரு சட்டப் பேராசிரியர் சட்ட விரோதமாக ஒரு குற்றவாளிக்கு உதவும் விசித்திரம் வித்யா வழக்கில் நடக்கிறது.
ஒரு பெண் அமைசசரே ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற கொலைகாரனுக்கு உதவும் விசித்திரம் நடக்கிறது.
பத்து வருடம் தண்டனை பெற்ற கைதியை நீதிமன்ற நடைமுறைக்கு மாறாக தண்டனை வழங்கிய நீதிபதி முனபே சாட்சி சொல்ல நிறுத்தும் விசித்திரம் நடக்கிறது.
ஆக மொத்தத்தில்
வித்யாவுக்கும் பெப்பே!
நீதி கிடைக்கும் என நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் பெப்பெப்பே!
வித்யாவுக்கும் பெப்பே!
நீதி கிடைக்கும் என நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் பெப்பெப்பே!
No comments:
Post a Comment