•3 பிள்ளைகளை மாவீரராக கொடுத்த தாயம்மாவின் இன்றைய தாகம் ஒரு குடம் தண்ணீர்!
கிளிநொச்சி பொன்னகரில் வாழும் தாயம்மா தன் 3 பிள்ளைகளை போராட்டத்திற்கு கொடுத்தவர். இன்று ஒரு குடம் தண்ணீருக்காக அலைகிறார்.
பொன்னகரில் இருக்கும் எண்ணூறு குடும்பங்களுக்கும் பசியும் தண்ணீரும்தான் பெரிய பிரச்சினை. அவர்கள் கேட்கிறார்கள்,
“பிள்ளையைக் குடுத்தம். புருசனைக் குடுத்தம். அண்ணன் தம்பிகளைக்கூடக் குடுத்தம்.
எங்கட ஒவ்வொ வீட்டலயும் யாராவது ஒருத்தர் போராட்டத்தில சாவடைஞ்சிருக்கிறாங்க.
எத்தனை பெட்டைப் புள்ளங்க கூட சாவடைஞ்சிருக்கெண்டு தெரியுமா? இப்பிடியெல்லாம் தியாகம் பண்ணிட்டு, இப்ப நாங்க ஒரு குடம் தண்ணிக்கே வழியில்லாமக் காஞ்சு கெடக்கோம்ல.
இதைக் கேட்கிறதுக்கு இந்த மண்ணில யாருமே இல்லயா அய்யா?
நாங்க இப்ப என்னத்த தமிழீழமா கேட்குறோம்.
ஒரு எடத்தில வெச்சு தண்ணியக் கொடுங்க. தாகத்துக்கு தண்ணியே கொடுக்காதவன்லாம் என்னய்யா பெரிய மனிசன்?
எங்க எல்லாம் போய்ட்டாங்க?

பொன்னகர் இருக்கும் அதே கிளிநொச்சி மாவட்டத்தில்தான் இரணைமடுக் குளம் இருக்கிறது. இருந்தும் தண்ணீருக்காக ஏன் இந்த மக்கள் அலைகிறார்கள்?
யாழ்ப்பாண மக்களுக்கு இரணைமடுக்குளத்தின் தண்ணீரை கொடுக்க முடியாது என்று மறித்த சிறீதரன் எம்.பி இந்த மக்களுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கவில்லை?
எந்தவித அர்ப்பணிப்பும் செய்யாத சிறீதரன் இந்த மக்களின் பாராளுமன்ற பிரதிநிதியாக இருக்கிறார். அவர் தனக்கு 5 கோடி ரூபா சொகுசு வாகனம் இறக்குமதி செய்கிறார்.
ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் தமக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்யும் மாகாணசபை உறுப்பினர்களும் இந்த மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண முயலவில்லை.
அவைத் தலைவருக்கு 90 ஆயிரம் ரூபாவுக்கு சொகுசு ஆசனம் வழக்கும் மாகாணசபை,
3 பிள்ளைகளை மாவீரர்களாக கொடுத்துவிட்டு ஒரு குடம் தண்ணீருக்காக அலையும் தாயம்மாவுக்கு உதவுமா?
3 பிள்ளைகளை மாவீரர்களாக கொடுத்துவிட்டு ஒரு குடம் தண்ணீருக்காக அலையும் தாயம்மாவுக்கு உதவுமா?
No comments:
Post a Comment