Sunday, March 31, 2024
செய்தி - ஈழத் தமிழ் அகதிகளுக்கு
செய்தி - ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுப்போம் - தமிழக முதல்வர் ஸ்டாலின்
இருட்டு வந்திட்டாலே சின்ராசு பாட ஆரம்பித்துவிடுவான் என்பதுபோல் தேர்தல் வந்திட்டாலே திராவிட முதல்வர் உருட்ட ஆரம்பித்துவிடுவார்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஈழஅகதிகளுக்கு வாக்குறுதி அளிப்பதும் தேர்தல் முடிந்த பின்பு அதை மறந்துவிடுவதும் திமுக வின் வழக்கமாகும்.
கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை,
40 வருடமாக தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை பெற்றுக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை,
கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அந்த அகதிச் சிறுவன் மணி எங்கே என்பதையாவது கூறுங்கள் பிளீஸ்.
எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி என்றும் அவருக்கு தமிழ் இன உணர்வு இல்லை என்று காட்டுவதற்காக கலைஞர் 1984ம் ஆண்டு ஈழ அகதிச் சிறுவன் ஒருவனை தத்தெடுத்து வளர்த்தார்.
கனிமொழி ஒரு தம்பி வேண்டும் என்று கேட்டதாகவும் இனி அந்த சிறுவன் கனிமொழிக்கு தம்பியாக இருப்பான் என்றும் கலைஞர் கூறினார்.
அந்த அகதிச் சிறுவனுக்கு மணி என்று பெயரும் வைத்தார். ஆனால் இப்போது அந்த மணி எங்கே என்று தெரியவில்லை.
சொத்தில் பங்கு கொடுக்க வேண்டி வரும் என அஞ்சி ஸ்டாலின் அந்த சிறுவனை கொன்றுவிட்டதாக ஸ்டாலினுடன் கூட இருந்த பரிதிஇளம்வழுதி கூறினார்.
தயவு செய்து இப்பவாவது அந்த அப்பாவி அகதிச் சிறுவன் எங்கே என்பதை கூறுங்கள் தமிழக திராவிட முதல்வரே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment