Wednesday, September 20, 2023
புலம்பெயர்ந்த நாடுகளில் திலீபனை
புலம்பெயர்ந்த நாடுகளில் திலீபனை நினைவுகூர அனுமதிக்கப்படுகிறது. அதில் வேற்று இனத்தவரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.
ஆனால் இலங்கையில் திலீபனை நினைவு கூர்ந்தால் ஊர்தி அடித்து நொருக்கப்படுகிறது. கூட வந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினரே தாக்கப்படுகிறார்.
இலங்கையில் ஒருவர் தன் இறந்தபோன உறவை நினைவுகூர சட்டப்படி அனுமதி உண்டு என்கிறார்கள்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள்.
ஆனால் தமிழர் நிலத்தில் தமிழர் தம் இறந்துபோன உறவை நினைவு கூர அனுமதிக்க மறுக்கிறார்கள்.
திலீபன் பயங்கரவாதி எனவே அவரை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்கிறார்கள்.
ஆனால் பயங்கரவாதி என்று கூறி கொல்லப்பட்ட ரோகணவிஜேயவீராவை நினைவு கூர அனுமதிக்கின்றனர்.
இதற்கு திலீபன் தமிழர், ரோகணா விஜயவீரா சிங்களவர் என்பதைவிட வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
அருகில் தமிழ்நாட்டில் எட்டுக்கோடி தமிழர் இருந்தும் எப்படி இவர்களால் தைரியமாக ஈழத்தில் தமிழர்களை தாக்க முடிகிறது?
எட்டுக்கோடி தமிழர்களையும் கோமாளிகளாக நினைக்கின்றதா சிங்கள அரசு?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment