Wednesday, September 20, 2023
அப்பாவி ஈழத் தமிழன் - தோழர்!
அப்பாவி ஈழத் தமிழன் - தோழர்! சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரை விடுதலை செய்யும்படி குரல் கொடுக்க முடியுமா?
தமிழக முற்போக்குவாதி – சீமான் ஒரு இனவெறியர். அவர் ஒரு பாசிசிட். அவரை ஒழிக்க வேண்டும்.
அப்பாவி ஈழத் தமிழன் - உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பின்பும் நான்கு தமிழரை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருப்பது தவறு அல்லவா?
தமிழக முற்போக்குவாதி – சீமான் ஒரு சங்கி. அவர் பாஜக வின் B டீம்.
அப்பாவி ஈழத் தமிழன் - சிறப்புமுகாமில் இருப்பவர்கள் சொந்த செலவில் நாடு திரும்ப விரும்பினால் அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் திராவிட முதல்வர் நாடு திரும்ப விரும்பும் சாந்தனுக்கு அனுமதி மறுப்பது தவறு இல்லையா?
தமிழக முற்போக்குவாதி – சீமான் ஒரு காமுகன். அவர் பல பெண்களை ஏமாற்றியுள்ளார்.
அப்பாவி ஈழத் தமிழன் - தான் இறப்பதற்கு முன் தன் மகனை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என சாந்தனின் தாயார் விரும்புகிறார். அவரின் விருப்பத்தை திராவிட முதல்வர் நிறைவேற்றுவாரா?
தமிழக முற்போக்குவாதி – விஜயலட்சுமி வடிக்கும் கண்ணீருக்கு சீமான் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அப்பாவி ஈழத் தமிழன் - ??????
(குறிப்பு - இது ஒரு கற்பனை உரையாடல்.)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment