Wednesday, September 20, 2023
இறப்பும் அதனால் ஏற்படும் இழப்பும்
இறப்பும் அதனால் ஏற்படும் இழப்பும் இயற்கையானதுதான்.
விரும்பியோ விரும்பாமலோ அதை நாம் எதிர் கொண்டுதான் ஆக வேண்டும்.
ஆனால் எமக்காக இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு அஞ்சும் நிலை இருக்கே அது மிகவும் கொடியது
இறந்தவர்கள் எமது உறவுகள். அவர்கள் எமக்காக மரணித்தவர்கள். அவர்களை நினைவு கூர்வது எமது கடமை.
இறந்தவர்களை நினைவு கூர மனிதாபிமானமாக அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேசம் கூறுகின்றது.
இலங்கையில் கூட உறவுகளை நினைவுகூர சட்டம் அனுமதிக்கின்றது.
ஆனாலும் நினைவு கூரப்படும்போதெல்லாம் இன நல்லிணக்கத்தை கெடுப்பதாக கூறுகின்றனர்.
நினைவு கூர்பவர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என மிரட்டுகின்றனர்.
இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அஞ்சி அஞ்சியே நாம் எம் உறவுகளை நினைவு கூர்வது?
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. தமிழன் மட்டும் ஏன் அஞ்சியே கிடக்க வேண்டும்?
நாம் வளர்க்கும் நாயாக இருந்தாலும் எட்டி உதைத்தால் இரண்டுமுறைதான் பொறுக்கும் . மூன்றாம் முறை முறைக்கும்.
ஆனால் எத்தனை முறை உதைத்தாலும் தமிழன் மட்டும் திருப்பி முறைக்கக்கூடாது என்கிறார்களே, இது என்ன நியாயம்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment