Wednesday, September 20, 2023
செய்தி – தமது நாட்டில் சீக்கிய தலைவர்
செய்தி – தமது நாட்டில் சீக்கிய தலைவர் ஒருவரை இந்திய அரசு கொன்றுள்ளதாக கனடா குற்றம்சாட்டியுள்ளது.
இந்திய அரசு கொன்றதா இல்லையா என்பதை ஆராய்வது எமது நோக்கம் இல்லை. இங்கு எமது கேள்வி என்னவெனில்,
தனது நாட்டில் வந்து தனது குடியுரிமை பெற்ற ஒருவரை கொன்றமைக்காக இந்தியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று கனடா அரசு கூறினால் அதை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா?
அல்லது, ஈழ அகதிகளை பயங்கரவாதிகள் என சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருப்பது போன்று கனடாவில் உள்ள இந்தியர்களை சிறப்புமுகாமில் அடைத்தால் அதை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா?
அல்லது, ஈழ அகதிகளை 40 வருடமாக குடியுரிமை வழங்காமல் வைத்திருப்பதுபோல் கனடாவில் இருக்கும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்காவிடில் அதை இந்திய அரசு எற்றுக்கொள்ளுமா?
அல்லது, ஈழ அகதிகளுக்கு இந்தியாவில் உயர் கல்வி மறுக்கப்பட்டதுபோன்று கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்கள் மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டால் அதை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா?
ஆனால் கனடா அரசு ஒருபோதும் அவ்வாறு செய்யாது. ஏனெனில் அதுதான் இந்திய அரசுக்கும் கனடா அரசுக்கும் உள்ள வித்தியாசம்.
யார் தவறு செய்கிறாரோ அவரையே கனடா அரசு தண்டிக்கும். மாறாக இந்திய அரசு போன்று ஒருவர் தவறு செய்தால் அதை வைத்து ஒரு இனமே குற்றவாளிகள் என்று முத்திரை குத்தாது.
குறிப்பு- கனடா மற்றும் இந்திய அரசு மோதல் எப்படி நகரப் போகின்றது என்று தெரியவில்லை. ஆனால் கனடா, லண்டன், அவுஸ்ரேலியா.அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியுரிமை எடுத்துக்கொண்டு இந்திய உளவு நிறுவனத்துடன் சேர்ந்து செயற்படுவதை பெருமையாக கூறித்திரியும் தமிழர் சிலர் இனி நிச்சயம் கவனத்திற்குள்ளாவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment