Wednesday, September 20, 2023
இலங்கை தீவில் ஈழத் தமிழர் பூர்வ குடிகளாக
இலங்கை தீவில் ஈழத் தமிழர் பூர்வ குடிகளாக வாழ்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்தும் பாரதி ஏன் சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாடினார் எனக் கேட்டு கடந்த வாரம் பதிவு ஒன்று செய்திருந்தேன்.
அதில் கருத்து பகிர்ந்த சிலர் "பாரதிக்கு நன்கு தெரிந்தும் " என்று எப்படி கூறுகின்றீர்கள் என என்னைக் கேட்டிருந்தனர்.
அதுமட்டுமன்றி பாரதி அன்றைய நிலையில் இலங்கைப பற்றி போதிய அறிவு இன்றி பாடியிருக்க கூடும் என குறிப்பிட்டனர்.
பாரதியின் ஞானக்குரு ஒரு ஈழத் தமிழர். அவரை பாரதி புதுவையில் சந்தித்து உரையாடியும் இருக்கிறார்.
அவர் பற்றி பாரதி எழுதிய கவிதை இதோ,
யாழ்ப்பாணத் தையனை யென் னிடங்கொ ணர்ந்தான்
இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான், பார்மேல்
கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்;
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment