Thursday, February 29, 2024
32 வருடம் சிறைவாழ்வின் பின்னரும்
32 வருடம் சிறைவாழ்வின் பின்னரும் கம்பீரமாக வந்தவரை 15 மாத சிறப்புமுகாம் வாழ்க்கை எப்படி சிதைத்துவிட்டது என்பதை பாருங்கள்
சிறப்புமுகாமில் நோய்வாய்ப்பட்டதும் பலமுறை தனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு சாந்தன் கோரியிருக்கிறார்.
ஆனால் சிறப்புமுகாமுக்கு பொறுப்பான தமிழக அரசு அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவில்லை.
இறுதியாக அவர் எழுந்து நிற்க முடியாமல் விழுந்து தவழ்ந்த வீடீயோ சமூக ஊடகங்களில் வெளிவந்து மக்களிடமிருந்து எதிர்ப்பு வந்தபின்பே அவர் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
திருச்சி மருத்துவமனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் மேலதிக சிகிச்சைக்காக என்றுகூறி சென்னை அழைத்துச் சென்றனர்.
திருச்சியில் இருந்து அரை மணி நேர விமான பயணத்தில் அவரை அழைத்து வந்து தாயாரிடம் ஒப்படைத்திருக்க முடியும்.
ஆனால் சிகிச்சைக்காக என்று 8 மணி நேரம் பயணம் செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
சென்னையில்கூட அவர் தன் தம்பியுடன் உற்சாகமாக உரையாடும் வீடியோ வந்தது.
அவர் தாயிடம் செல்கிறார். அவர் தாயின் 33 வருடம் நிறைவேறப்போகிறது என்று எல்லோரும் மகிழ்வுடன் இருக்க திடீரென்று அவர் இறந்தவிட்டதாக செய்தி வருகிறது.
மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தவருக்கு நள்ளிரவு ஒரு மணிக்கு மாரடைப்பு வந்ததாகவும் 4 மணிக்கு இறந்துவிட்டார் என்றும் தமிழக அரசு கூறுகின்றனது.
தமிழக அரசின் இந்த மாரடைப்பு மரண செய்தியை நம்ப மனம் மறுக்கிறது.
22ம் திகதி மத்திய அரசின் அனுமதி கிடைத்தும் ஏன் சாந்தனை அனுப்பவில்லை என உயர்நீதிமன்றம் கேட்டபோது அவர் உடந்நிலையைக் காரணம் காட்டியுள்ளது தமிழக அரசு
தற்போது சாந்தனின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இங்கு கொடுமை என்னவென்றால் சாந்தன் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு பலமுறை கோரியும் சிகிச்சைஅளிக்காத தமிழக அரசு, சிகிச்சை அளிக்க சாந்தன் சம்மதிக்க மறுத்தபடியால்தான் அவரை காப்பாற்ற முடியாமற்போனது என்று தற்போது கூறுகின்றது.
இதேவேளை சாந்தனுடன் உடன் இருந்த வழக்கறிஞர் சாந்தன் மரணத்தில் சந்தேகம் தெரிவித்துள்ளார். இது ஒரு கொலை என அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
சாந்தன் 32 வருடமாக சிறையில் வாடியதற்கு இந்திய மத்திய அரசே பொறுப்பு. ஆனால் கடைசி 15 மாதங்களும் அவர் சிறப்புமுகாமில் வாடியதற்கு தமிழக அரசே பொறுப்பு.
எனவே சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே பதில் சொல்ல வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment