Wednesday, February 28, 2024
அழகிய தேம்ஸ் நதி ஓரத்தில் நடக்கிறேன்
அழகிய தேம்ஸ் நதி ஓரத்தில் நடக்கிறேன்
ஆனால் சோனப்பு உப்புக்காற்றே என் மனதில் தவழுகிறது
உயர்ந்த கோபுரங்கள் கொண்ட தேவாலயங்களுக்குள் செல்கிறேன்
அங்கு கடவுள் இயேசுவை என்னால் காண முடியவில்லை
ஆனால் கரவெட்டி தேவாலயத்தில் Sisterரிடம் வாங்கி தின்ற கேக் துண்டில் இயேசுவின் அன்பை உணர்ந்திருக்கிறேன்.
நாகரீகமான ஹோட்டல்களில் விலையுயர்ந்த உணவுகளை உண்கிறேன்
ஆனாலும் சிறு வயதில் அள்ளி தின்ற என் வீட்டு முற்றத்து மண் வாசனை இன்னும் மறக்கவில்லை
லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து பல பட்டங்களை பெற்றுவிட்டேன்
ஆனாலும் மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் படித்த அரிவரி இன்னும் நினைவில் இருக்கிறதே.
குந்தியிருந்த மதவடியும் ஓடி விளையாடிய அத்துளு வயல் வெளிகளும் மனதில் இருக்கும்வரை
ஒவ்வொரு பொழுதும் புலரும்போது நான் என்னை உயிர்பித்துக்கொண்டிருப்பதாக உணர்கிறேன்.
நாளை என் ஊரும் என் சனமும் அழியுமென்றால்
இன்றே நான் செத்துவிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
- லண்டனில் ஒரு கரவெட்டியானின் ஏக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment