இருவரும் தமிழர்கள். அது மட்டுமல்ல இருவரும் திருமலையைச் சேர்ந்தவர்கள்
ஒருவர் எல்லோரும் அறிந்த திருமலை பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் ஐயா. மற்றவர் தியாகி நடராஜா.
1957ல் சுதந்திரநாளை கரிநாளாக தமிழரசுக்கட்சி அறிவித்தது.
அப்போது திருமலையில் சிங்கக்கொடியை அகற்றிவிட்டு கறுப்புகொடியை ஏற்றிய நடராஜனை சிஙகள பொலிஸ் சுட்டுக்கொன்றது.
எந்த சிங்கக்கொடியை இறக்க திருமலை நடராஜன் உயிர் துறந்தாரோ அதே சிங்கக்கொடியை அதே திருமலை எம்பி சம்பந்தர் ஐயா தூக்கிப் பிடிக்கிறார்.
பாவம் நடராஜன்.
குறிப்பு – 04.02.2024 யன்று நடராஜனின் 67 வது நினைவு தினம்.
No comments:
Post a Comment