Thursday, February 15, 2024
உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாச்சலம்
உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாச்சலம் மற்றும் பிரதாப்சிங் ஆகியோர் வழக்கு எண் WP 15044/91 இல் வழங்கிய தீர்ப்பு
(1)சிறப்புமுகாமில் வைக்கப்பட்டவர்கள் விரும்பினால் தம் குடும்பத்தவர்களை வரவழைத்து தம்முடன் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும்
(2) சிறப்புமுகாமில் உள்ளவர்களை சிறையில் உள்ளது போன்று அடைத்து வைக்கக்கூடாது. அவர்கள் முகாம் எல்லைக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும்
(3) பார்வையாளர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவர். நேரக்கட்டுபாடு எதுவும் இல்லை. விரும்பிய நேரம் பேசுவதற்கும் பொருட்களை கொடுக்கவும் அனுமதிக்கப்படுவர்.
(4) நாடு திரும்பிச் செல்ல விரும்பினால் தம் சொந்த செலவிலோ அல்லது அரசு செலவிலோ அனுப்பி வைக்கப்படுவர்.
தமிழக அரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலே உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர்.
மேற்கண்ட உரிமைகள் யாவும் வழங்கப்பட்டு சட்டப்படியே சிறப்புமுகாம் நடத்தப்படுவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது.
ஆனால் தமிழக அரசின் நடைமுறை என்ன?
மனட்சாட்சி உள்ளவர்களே பதில் தாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment