Wednesday, February 28, 2024
கடந்த வருடம் குஜராத்தில்
கடந்த வருடம் குஜராத்தில் அதானியின் துறைமுகத்தில் பல கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
அப்போது, போதைப் பொருள் கடத்தலில் குஜராத்திகள் சிக்கியது எப்படி என்று செய்தி போடப்படவில்லை.
ஆனால் இப்போது யாரோ ஒரு தமிழ் தயாரிப்பாளர் கடத்தினார் என்றதும் “தமிழர்கள் சிக்கியது எப்படி?” என்று செய்தி போடுகின்றனர்.
குஜராத் மீனவனை பாக்கிஸ்தான் சுட்டால் “இந்திய மீனவன் சுடப்பட்டார்” என்று செய்தி போடுபவர்கள் தமிழ் மீனவன் சுடப்பட்டால் இந்திய மீனவன் சுடப்பட்டார் என செய்தி போடுவதில்லை.
சரி. இப்போது இங்கு நான் கூற வரும் விடயம் என்னவெனில் கடந்தவருடம் சில கொழும்பு தாதாக்களை கைது செய்து சிறப்புமுகாமில் அடைத்துவிட்டு “புலிகள் இயக்கத்தை மீளவும் கட்டுவதற்காக போதைப் பொருள் கடத்தினார்கள்” என்று இந்திய அரசு குற்றம்சாட்டியது.
அப்போது, “சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ்அகதிகள் யாவரும் கிரிமினல்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள். அவர்களை நாடு கடத்த வேண்டும்” என்று திமுக உடன்பிறப்புகள் எழுதினார்கள்.
அப்போது, “இந்தியாவில் இருந்துதான் ஈழத்திற்கு போதைப் பொருள் கடத்தப்படுகிறது. ஈழத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படுவதில்லை” என்று நான் கூறியிருந்தேன்.
அவ்வாறே கடந்த வருடம் ஈழத்திற்கு போதைப் பொருள் கடத்தியதாக கீழக்கரை திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
இப்போது டில்லியில் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவரும் திமுகவைச் சேர்ந்தவரே. அவர் பிடிபட்டதும் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக அறிவித்துள்ளது.
ஈழத் தமிழ் அகதிகள் மீது பழி சுமத்திய அந்த திமுக உடன் பிறப்புகள் இனி என்ன கூறப்போகிறார்கள்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment