Wednesday, February 28, 2024
பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடியதால்
பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடியதால் அவர் ஒரு பயங்கரவாதி என்று திமுக உபி ஒருவர் எழுதியிருந்தார்.
சரி அப்படியென்றால் ஆயுதம் ஏந்தாத காந்தீய அமைப்பு செயற்பாட்டாளரான டேவிட் ஐயா தமிழக அரசின் கியூ பிராஞ்சின் பயங்கரவாதி லிஸ்டில் வைக்கப்பட்டிருந்தது ஏன்?
தள்ளாத வயதில்கூட அவரை ஒரு கொடிய பயங்கரவாதியாக கியூ பிராஞ் கண்காணித்தது ஏன்?
இதுகூடப் பரவாயில்லை, அமெரிக்காவின் பயங்கரவாதி லிஸ்ட்டில் இப்பவும் நெல்சன் மண்டலேவின் பெயர் இருக்கிறது.
எனவே யார் பயங்கரவாதி என்பதைவிட யாருக்கு பயங்கரவாதி என்பதையே பார்க்க வேண்டும்.
எதிரி எம்மை பயங்கரவாதி என்று கூறினால்; நாம் கவலைப்பட தேவையில்லை.
மாறாக எதிரி எம்மை பயங்கரவாதி என்று கூறாவிட்டால்தான் நாம் கவலை கொள்ள வேண்டும்.
எதிரி எம்மை பாராட்டினால் நாம் அவனுக்கு சோரம் போய்விட்டோம் என்று அர்த்தம் - மாவோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment