காஸ்மீரும் ஈழத் தமிழர்களும் !
காஸ்மீரைப் பிரித்து பௌத்தர்களுக்கு ஒரு மாநிலம் உருவாக்கியமைக்கு இலங்கை பிரதமர் ரணில் பாராட்டு தெரிவித்தள்ளார்.
சரி. அப்படியென்றால் இலங்கையில் ஒரு இந்து மாகாணம் உருவாக்க ரணில் ஆதரவு தெரிவிப்பாரா? அல்லது இந்தியாவாவது ஆதரவு தெரிவிக்குமா?
நிச்சயமாக இல்லை. தமிழனுக்கு எந்த வடிவத்திலும் ஏதும் உரிமை கிடைக்க இலங்கை அரசும் அனுமதிக்காது . இந்திய அரசும் அனுமதிக்காது.
ஆனால் காஸ்மீரில் தன் சொந்த மக்களை கொன்று குவிக்கும் இந்திய அரசு இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு உதவும் என்று சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
சம்பந்தர் ஜயா ஈழத் தமிழர்களுக்கு உரிமைகளை பெற்று வருவதற்காக டில்லி சென்றிருப்பதாக வேறு அவர்கள் பொய்களை கூறுகின்றனர்.
சம்பந்தர் ஜயா டில்லி மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை செய்திருந்தார். அதற்காக அடிக்கடி செக்கப்பிற்கு சென்று வருகிறார்.
இம் முறையும் தனது மருத்துவ சிகிச்சைக்காகவே சென்றுள்ளார். ஆனால் மோடி அரசுடன் பேசுவதற்காக சென்றிருப்பதாக அவரது விசுவாசிகள் பொய் கூறுகின்றனர்.
சரி இது காலம் காலமாக நடக்கும் ஏமாற்று நாடகம்தானே. இதைப் பற்றி பேசுவதில் எந்தப் பயனும் இல்லை.
ஆனால் சில ஈழத்தமிழர்கள் காஸ்மீரில் இந்திய ராணுவத்தின் அக்கிரமங்களை ஆதரித்து எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது.
இதே இந்திய ராணவம் ஈழத்தில் நடத்திய அக்கிரமங்களை அத்தனை இலகுவில் மறந்து விட்டார்களா?
அதுமட்டுமல்ல இதே இந்திய ராணுவம் நாளை தமிழ் நாட்டிற்கும் வரும். அப்போது தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்க உலகத்தில் யாருமே இருக்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment