பொதுவாக ஆங்கில இதழ்களில் வரும் அரசியல் நையாண்டிப் படங்களை ( கேலிச் சித்திரம்) பார்க்கும்போது அதே மாதிரி எமது தமிழ் பரப்பிலும் வரவேண்டும் என்று நான் விரும்புவது உண்டு.
தற்காலங்களில் தமிழ்நாட்டில் வரும் சில அரசியல் மீம்ஸ்களை பார்க்கும்போது எனது அவ் விருப்பம் நிறைவேற ஆரம்பித்தள்ளது என்ற எண்ணம் தோன்றுவதுண்டு.
ஆனாலும் ஈழத்தில் அவ்வாறு கேலிச் சித்திரங்கள் வராதா என ஏங்குவதுண்டு. இன்று நான் பார்த்த இந்த கேலிச்சித்திரம் என் ஏக்கத்தை குறைத்துள்ளது.
ஆம். இதை உருவாக்கியவர் யார் என்று தெரியவில்லை. ஆனாலும் அந்த மனிதருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
எவ்வளவு அழகாக எமது அமைசர்களின் கல்வி தரத்தை கிண்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.
No comments:
Post a Comment