•சிவகங்கைச் செட்டியாரும்
சிவகங்கைப் போராளிகளும்
சிவகங்கைப் போராளிகளும்
சிவகங்கைச் செட்டியர் சிதம்பரம் முன்னாள் உள்துறை அமைச்சர் மட்டுமல்ல பிரபலமான சட்டத்தரணியும்கூட
அவர் மட்டுமல்ல அவரது மனைவியும்கூட மிகவும் பிரபலமான சட்டத்தரணியாவார்.
ஆனால் இன்று சிதம்பரம் சட்டத்தை மதிக்காமல் தலைமறைவாகிவிட்டார். அவருடைய மனைவியும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்.
இதே சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது தனக்கு குண்டு வைக்க முயன்றார்கள் என்று சிவகங்கையைச் சேர்ந்த ஜந்து தமிழ் இளைஞர்களை பிடித்து சிறையில் அடைத்தார்.
ஒருநாள்கூட தான் சிறையில் இருக்கக்கூடாது என்று சிதம்பரம் தலைமறைவாக உள்ளார். ஆனால் அவரால் அடைக்கப்பட்ட அந்த இளைஞர்கள் 1915 நாட்களாக சிறையில் இருக்கிறார்கள்.
தனக்கு பிணை வழங்க நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தை கூடுமாறு கேட்டிருக்கிறார் சிதம்பரம். ஆனால் இந்த இளைஞர்களின் பிணை கடந்த 5 வருடங்களாக மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த இளைஞர்களின் பிணை மனு அண்மையில் நீதிபதியால் மறுக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் இந்த பிணை மறுக்கப்படுகிறது என்ற தீர்ப்பை எழுதுவதற்கே அந்த நீதிபதிக்கு 6 மாதங்கள் பிடித்துள்ளது.
இப்போது சிதம்பரத்தை அரசு பழிவாங்கிறது என்று காங்கிரசார் மட்டுமல்ல ஸ்டாலின்கூட கூறுகிறார்கள்.
ஆனால் இதே சிதம்பரத்தாலும் அரசாலும் இந்த தமிழ் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து இவர்கள் வாய் திறப்பதில்லை.
இந்தியா ஜனநாயக நாடு இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். அப்படியென்றால் சட்டத்தின் முன் சிவகங்கை செட்டியாரும் சிவகங்கை இளைஞர்களும் சமமாகத்தானே நடத்தப்பட வேண்டும்.
ஆனால் சிவகங்கை செட்டியர் சிதம்பரத்திற்கு ஒரு நியாயம். சிவகங்ககை தமிழ் போராளிகளுக்கு இன்னொரு நியாயம் அல்லவா வழங்கப்படுகிறது.
இது என்ன நியாயம்?
No comments:
Post a Comment