Friday, August 30, 2019

சவேந்திர டி சில்வா – சேர்! என்னை புதிய ராணுவ தளபதியாக நியமித்தமைக்கு நன்றி.

சவேந்திர டி சில்வா – சேர்! என்னை புதிய ராணுவ தளபதியாக நியமித்தமைக்கு நன்றி. ஆனால் சம்பந்தன் மாத்தையா கடும் எச்சரிக்கை செய்திருப்பதாக செய்தியில் படித்தேன்.
ஜனாதிபதி மைத்திரி – அந்தாள் அறளை பேந்து கதைக்குது. அமெரிக்க தூதருடன் தண்ணி அடிச்சிட்டு பத்திகைக்கு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை என்று அறிக்கை கொடுக்கிறார். அமெரிக்காகாரன் இதையெல்லாம் கண்டுக்கிறானா இல்லையே.
சவேந்திர டி சில்வா – ஆனாலும் கடும் எச்சரிக்கை என்பதால் கொஞ்சம் யோசிக்க வேண்டிக்கிடக்கு சேர்.
ஜனாதிபதி மைத்திரி – அவர் இன்னொரு பங்களாவுக்கு அடி போடுகிறார். கொடுத்தால் பேசாமல் இருப்பார். அப்புறம் அவரிடம் கேட்டுவிட்டுத்தானே சரணடைந்தவர்களை கொன்றோம். பிறகு ஏன் இப்ப அவர் அறிக்கை விடுகிறார்?
சவேந்திர டி சில்வா – அப்புறம் சேர், சிறீதரன் மாத்தையாவும் என் கடைவாயில் தமிழர் ரத்தம் வடிகிறது என்று கூறுகிறார்.
ஜனாதிபதி மைத்திரி – அதொன்றுமில்லை. புலிகளின் நகைகள் அவர் வீட்டுக் காணியில் இருப்பதாக ராணவம் போய் தேடியிருக்கிறது. அதுதான் அவர் தமிழ் மக்களை ஏமாற்ற இப்படி பேசுகிறார்.
சவேந்திர டி சில்வா – தன் உயிருக்கு ராணுவத்தால் ஆபத்து என்று வேற அவர் கூறியிருக்கிறார் சேர்.
ஜனாதிபதி மைத்திரி – அவருக்கு இத்தனை காலமும் பாதுகாப்பு கொடுப்பதே எமது பொலிசும் ராணுவமும்தானே? எங்கே அந்தாள் உப்பு போட்டு சோறு தின்பவராக இருந்தால் சிங்கள பொலிஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறட்டும் பார்க்கலாம்?
சவேந்திர டி சில்வா – அப்ப ஒரு பிரச்சனையும் இல்லைதானே சேர்?
ஜனாதிபதி மைத்திரி – தலைவர்களை நாம் விலைக்கு வாங்கலாம். ஆனால் தமிழ் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது. அவர்கள் ஒருபோதும் நாம் செய்த கொலைகளை மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். அதுவும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இனப்படுகொலைக்கு நியாயம் பெறாமல் ஓயமாட்டார்கள். இது ஊறதி.
சவேந்திர டி சில்வா – அப்ப என்ன செய்யிறது சேர்?
ஜனாதிபதி மைத்திரி – புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொஞ்சம் இறைச்சித் துண்டுகளை வீசிப் பாருங்கள். ஏதும் நாய்க்குட்டிகள் சிக்கினால் அவர்களை வைத்து ஏதாவது முயற்சி செய்வோம்.
(யாவும் கற்பனை இல்லை)

No comments:

Post a Comment