இவர்கள் தமிழர்கள். இவர்கள் லண்டனில் இருக்கிறார்கள்.
இவர்கள் விரும்பியிருந்தால் சினிமாவுக்கு போயிருக்கலாம். அல்லது கோயிலுக்கு போயிருக்கலாம்
வேலைக்கு போயிருந்தால்கூட ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 8 பவுண்ட்ஸ் உழைத்திருக்கலாம்
ஆனால் இவர்கள் காஸ்மீர் மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த வந்திருக்கிறார்கள்.
காஸ்மீரில் இந்திய அரசின் அக்கிரமங்களை கண்டிக்க வந்திருக்கிறார்கள்.
இந்திய அரசு செய்வது தவறுதான் என்று தெரிந்தாலும் இந்திய அரசை எப்படி கண்டிப்பது என்று பல தமிழ் அமைப்புகள் தயங்கும் நிலையில் இவர்கள் தைரியமாக தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு இந்த அரசியலை அவர்களது தமிழ் சொலிடாறிற்றி அமைப்பு கொடுத்திருக்க கூடும்.
ஆனால் அவர்கள் வெறும் ஆறு பேராக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.
அவர்கள் தீப் பொறியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அது நிச்சயம் பற்றி எரியத்தான் போகிறது.
அவர்களது உணர்வுகள் பாராட்டுக்குரியவை. வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment