• நாம் ஏன் திரும்பி பார்க்க வேண்டும்?
தோழர் ரகுமான் ஜான் அவர்கள் தனது 40 வருட போராட்ட வரலாற்றை திரும்பி பார்த்திருக்கிறார்.
ஆம். அதனை சுமார் 1400 பக்கங்களில் 3 நூல்களாக தந்திருக்கிறார்.
இவற்றின் வெளியீடு லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் நேற்றைய தினம் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்றது.
இவ்வெளியீடு குறிப்பான சில விடயங்களால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
(1) இனி ஒரு போராட்டம் வர முடியுமா என பலரும் கேள்வி எழுப்பும் இத் தருணத்தில் போராட்டம் குறித்து இவ் நூல்கள் வந்துள்ளன
(2) நடந்து முடிந்த போராட்டத்தின் ஒரு பகுதியை இது திரும்பிப் பார்ப்பதால் அது ஒரு வரலாற்று ஆவணமாகவும் அமைகிறது.
(3) மிகவும் முக்கியமான விடயம் என்னவெனில் தான் திரும்பிப் பார்ப்பது தொடர்ந்து முன்னோக்கி செல்வதற்காகவே என அவர் தெரிவித்துள்ளார்.
(4) அது மட்டுமல்ல அது குறித்து உரையாடவும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆம். தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு மூன்று முக்கியமான விடயங்கள் இன்று அவசியமானவை.
அவையாவன,
(1) உரையாடல்
(2) உரையாடல்
(3) உரையாடல்.
(1) உரையாடல்
(2) உரையாடல்
(3) உரையாடல்.
ஆக்கபூர்வமான , அறிவுபூர்வமான , அர்ப்பணிப்பான ஒரு உரையாடலுக்கு தனது பங்களிப்பை தோழர் ரகுமான் ஜான் வழங்கியுள்ளார்.
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
No comments:
Post a Comment