Sunday, November 20, 2016

•அடுத்த இந்திய பிரதமர் அம்பானியா? அல்லது விஜய் மல்லையாவா?

•அடுத்த இந்திய பிரதமர் அம்பானியா?
அல்லது விஜய் மல்லையாவா?
இந்தியாவில் சுற்றில் உள்ள பணத்தின் அளவு ரூ.16 லட்சம் கோடி. அதில் ஏறத்தாழ ரூ.14 லட்சம் கோடி செல்லாததாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட பணத்தில் கறுப்புப் பணம் என்பது நான்கில் ஒரு பங்கு என்று வைத்துக்கொண்டால்கூட ரூ.3.5 லட்சம் கோடி
இந்தியாவிலிருந்து 2014ஆம் ஆண்டு வெளியேறிய கறுப்புப் பணத்தின் அளவு ரூ.56.5 லட்சம் கோடி.
எனவே எவ்வளவு கறுப்புப் பணத்தை, நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் வாயிலாக அழிக்கமுடியும்?
உள்நாட்டில் நோட்டுகளாக உள்ள ஒரு சிறு பகுதியைத்தான் அழிக்க முடியும். மிகப்பெரும் பகுதி வெளியே அல்லவா உள்ளது.
ஆக, இந்த அறிவிப்பின் உள் அரசியல் என்ன என்பது வெளிச்சம் ஆகிறது அல்லவா? முதலாளிகளின் நலன்களுக்கு எந்தவொரு பாதிப்பையும் மோடி ஏற்படுத்தமாட்டார் என்பதே.
இங்கு எமது கவலை என்னவெனில் அமெரிக்காவில் முதலாளி ட்ரம்ப் நேரடியாக ஆட்சிக்கு வந்தது போல் இனி தாங்களும் நேரடியாக ஆட்சி செய்வோம் என இந்திய முதலாளிகள் விரும்பினால் என்ன செய்வது?
காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டும் என்றுமில்லாதவாறு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கின்றன. இந்நிலையில் இவர்களுக்கு மாற்றாக புரட்சிகர சக்திகளும் பலமாக இல்லை.
எனவே இந்நிலையில் அமெரிக்காபோல் ஒரு முதலாளி கவர்;ச்சிகரமான, துவேசங்களை ஊட்டக்கூடிய கோசங்களுடன் மக்கள் முன் தோன்றினால் அவர் வெல்லக்கூடும்.
அப்படியென்றால் இந்தியாவின் அடுத்த பிரதமாரக அம்பானியா அல்லது விஜய் மல்லையாவா வரப் போகிறார்?

No comments:

Post a Comment