Sunday, November 20, 2016

•அன்னை பூபதியின் மரணம் எமக்கு கற்றுத் தந்த பாடம்!

•அன்னை பூபதியின் மரணம்
எமக்கு கற்றுத் தந்த பாடம்!
இன்று அன்னை பூபதியின் பிறந்த தினம். இவரை இன்றைய எமது தமிழ் தலைவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
ஏனெனில் தமிழ் மக்களுக்கு அன்னை பூபதியின் மரணம் மறக்க முடியாத ஒரு பாடத்தை கற்றுத் தந்துள்ளது.
பத்து பிள்ளைகளின் தாயாரான அன்னை பூபதி 19.03.1988 ல் தனது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். 19.04.1988 யன்று மக்கள் முன்னிலையில் அவரது உயிர் பிரிந்தது.
“இந்திய படைகள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். புலிகளுடன் பேச்சுவார்த்தை செய்ய வேண்டும்”. இதுவே அன்னை பூபதி வைத்த கோரிக்கை.
இவை நியாயமான கோரிக்கை மட்டுமல்ல நிறைவேற்றியிருக்கக்கூடிய கோரிக்கையும் கூட. ஆனால் இந்திய அரசும் அதன் இரணுவமும் பிடிவாதமாக இருந்து அவரை சாகடித்தன.
அகிம்சையைப் போதித்த காந்தி தேசம் என கூறப்படும் இந்தியாவே அன்னை பூபதியின் அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லை.
போர் நிறுத்தம் என்ற நியாயமான கோரிக்கையைக்கூட அகிம்சைப் போராட்டத்தால் பெற முடியவில்லை என்பதே அன்னை பூபதியின் மரணம் எமக்கு கற்றுத் தந்துள்ள பாடம்.
அன்னை பூபதி ஒருபோதும் ஆயுதம் ஏந்திப் போராடியவர் அல்ல. இலங்கை இந்திய அரசு மொழிகளில் கூறுவதாயின் அவர் “பயங்கரவாதி” இல்லை.
ஆனால் தமிழினிக்கு புத்தகம் அடிப்போர், பாடல்கள் பாடுவோர் அன்னை பூபதிக்கு ஏன் புத்தகம் வெளியிடுவதில்லை, பாடல்கள் பாடுவதில்லை?
தமிழினி “ஆயுதப் போராட்டம் தேவையில்லை” என்று எழுதியதால் இலங்கை இந்திய அரசு கைக்கூலிகளால் போற்றப்படுகிறார்.
அகிம்சைப் போராட்டத்தை இலங்கை இந்திய அரசுகள் ஒருபோதும் மதிக்கப் போவதில்லை என்ற உண்மையை அன்னை பூபதியின் மரணம் காட்டுவதால் அவரது பெயர் மறைக்கப்படுகிறது.
ஒவ்வொரு தமிழர் நெஞ்சங்களிலும் மறக்காமல் நினைவில் இருக்க வேண்டிய பெயர் தமிழினி அல்ல மாறாக அன்னை பூபதியே.
தமிழர் நெஞ்சங்களில் மட்டுமல்ல தமிழரின் போராட்ட வரலாற்றிலும் அன்னை பூபதியின் பெயர் நிலைத்து நிற்கும்.

No comments:

Post a Comment