•தோழர் தமிழரசன் முன்வைத்த தமிழ்நாட்டு விடுதலை!
தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைய வேண்டிய தருணம் வந்தவிட்டதாக கௌத்தூர் மணி அவர்கள் அண்மையில் கூறியிருந்தார்.
மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்குமேயானால் தானே தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று வைகோ பேசியுள்ளார்.
மோடி அரசு தமிழ்நாட்டிற்கு பல வழிகளிலும் துரோகம் இழைக்கிறது என்று கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.
இவ்வாறு இன்று பலரும் தமிழக விடுதலைக்கு சாதகமான கருத்துகளை கூற ஆரம்பித்துள்னர்.
ஆனால் சுமார் 33 வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு விடுதலையை தோழர் தமிழரசன் பெண்ணாடம் மாநாடு மூலம் முன்வைத்தார்.
தமிழ்நாடு விடுதலையின் அவசியத்தை வலியுறுத்தும் அவரது பெண்ணாடம் மாநாட்டு அறிக்கையை சென்னையில் 14.11.16 யன்று “பொதுமை” பதிப்பகம் வெளியிடுகிறது.
ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என்றார் தோழர் தமிழரசன்.
ஆம். தமிழக மக்கள் தமது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி தமிழக விடுதலையைப் பெறுவதே ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு செய்யும் உதவியாகும் என்றார்.
தமிழக மக்களை வஞ்சிக்கும் இந்திய அரசே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் நசுக்கிறது. எனவே பொது எதிரியான இந்திய அரசுக்கு எதிராக ஈழ தமிழக மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இன்று,
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவன் கொல்லப்பட்டதற்கு தமிழகத்தில் இலங்கை தூதரகத்தை தமிழ் மக்கள் முற்றுகையிடுகிறார்கள்.
காவிரிப் பிரச்சனைக்காக யாழ் இந்திய தூதரகத்திற்கு முன்னால் தமிழ் மக்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
முதன் முறையாக தமிழக மக்களின் பிரச்சனைக்காக லண்டன் மற்றும் கனடாவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடினார்கள்.
இந்த மாற்றம் தமிழரசன் விரும்பிய மாற்றம். அதுமட்டுமல்ல தமிழரசன் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையை நோக்கி மக்களை திரள வைக்கும் மாற்றம்.
அதற்கு உதவும் விதத்திலே அவரது மாநாட்டு அறிக்கைகளை “பொதுமை” பதிப்பகம் வெளியிடுவது உண்மையிலே மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
அவர்களது இத்தகைய பங்களிப்பை பாராட்டுவதோடு அவர்களது முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment