Sunday, November 20, 2016

•காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது- ஆனால் தமிழன் மட்டும் தன் அடிமைத்தனத்திற்கு எதிராக எழக்கூடாதா?

•காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது- ஆனால்
தமிழன் மட்டும் தன் அடிமைத்தனத்திற்கு எதிராக எழக்கூடாதா?
இதுவரை 3 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டுள்னர். கொன்ற இலங்கை அரசு குற்றவாளி இல்லையாம். ஆனால் அதற்கு எதிராக போராடியது பயங்கரவாதமாம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார்.
முள்ளிவாய்க்காலில் இரு நாட்களில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு கொன்றதாக ஜ.நா சபை கூறுகிறது. ஆனால் அதைவிட அதிகமான தமிழர்களை புலிகள் கொன்றதாக ஒரு ஊடகவியலாளர் புத்தகம் எழுதுகிறார்.
இலங்கை அரசு தமிழ்மக்களை கொன்றது இனப்படுகொலை இல்லையாம். ஆனால் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது மிகப்பெரிய இனப் படுகொலையாம் என்று ஒரு மென்வலுத் தலைவர் கூறுகிறார்.
பல்கலைக்கழக மாணவர் இருவரை அநியாயமாக பொலிஸ் சுட்டுக் கொன்றுள்ளது. ஆனால் அதற்கு எதிராக மாணவர்கள் போராடக்கூடாதாம். ஏனென்றால் அது தீர்வைக் குழப்பிவிடுமாம் என்று இன்னொரு தலைவர் கூறுகிறார்
தமிழர்கள் எல்லாம் நாய்கள். அவர்களை கொல்வேன் என்று ஒரு பிக்கு பகிரங்கமாக மிரட்டுகிறார். அதனைக் கண்டிக்க வக்கில்லை.
ஆனால் எதுவும் பேசாமல் மௌனம் காக்க வேண்டுமாம். அதுதான் வீரமாம் என்று ஒரு தமிழ் பிரமுகர் போதிக்கிறார்.
மிருகங்கள்கூட தமக்கு ஆபத்து வரும்போது அதற்கு எதிராக இறுதிவரை போராடியே மடிகிறது. எந்த மிருகமும் போராடாமல் மடிவதில்லை.
ஆனால் தமிழ் இனத்தில் மட்டும் தமிழ் மக்களை போராடாமல் அடிமையாகவே இருங்கள் என்று கூறபவர்கள் தலைவர்களாகவும் பிரமுகர்களாகவும் இருக்கிறார்கள்.
என்னே அவலம் இது?
தமிழ் மக்கள் ஒன்று சேருவது எப்போது?
அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவது எப்போது?
முதலில் உரிமைகளை இழந்தோம்
பின்னர் உடமைகளை இழந்தோம்.
அடுத்து உயிர்களை இழந்தோம்
இப்போது உணர்வுகளையும் இழக்கலாமா?

No comments:

Post a Comment