•நல்லுர் முருகனும் நம்மட சிவாஜிலிங்கத்தாரும்
முருகப் பெருமான் - பக்தா சிவாஜிலிங்கம்! உன் பக்தியை மெச்சினேன். நீ உடைத்த ஆயிரம் தேங்காயில் என் உள்ளம் குளிர்ந்தது. இந்தா எனது வேல் ஆயுதத்தையே உனக்கு தருகிறேன். இதை வைத்து போராடி உன் மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பாயாக.
சிவாஜிலிங்கம் - எல்லாம் வல்ல முருகப் பெருமானே! என்ன உனக்கு பகிடி, வெற்றி தெரியாதா? நான் டயபற்றிக்ஸ் நோயாளி என்று உனக்கு தெரியும்தானே. எங்கட பொடியள் துப்பாக்கி தூக்கிய காலத்திலேயே நான் துப்பாக்கி தூக்காமல் வீர வசனம் பேசினனான். இப்ப ஆயுதம் தூக்கு என்றால் நான் என்ன செய்வது?
முருகப் பெருமான்- சரி பக்தா! ஆனால் இப்ப என் கவலை என்னவென்றால் நீ ஆயிரம் தேங்காய் உடைத்தாய் என்பதை கனடாக்காரன்கள் கேள்விப்பட்டால் இனி அவங்கள் போட்டிக்கு பத்தாயிரம் தேங்காய் உடைக்கப் போறாங்களே. அதை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது!.
No comments:
Post a Comment