•பன்றி பல குட்டிகள் போடலாம். ஆனால்
யானை ஒரு குட்டி போடும்போதுதான் பூமி அதிர்கிறது
யானை ஒரு குட்டி போடும்போதுதான் பூமி அதிர்கிறது
அண்மையில் யமுனா ராஜேந்திரன் அவர்களின் 7 நூல்கள் லண்டனில் வெம்பிளி நகரில் அறிமுகம் செய்யப்பட்டது.
அவர் கடந்த இரு வருடங்களில் 18 நூல்கள் எழுதி வெளியிட்டிருப்பதாகவும் அதாவது மொத்தம் 5000 பக்கங்கள் எழுதியிருப்பதாக தெரிவித்தார்.
இது உண்மையில் ஒரு சாதனைதான். ஒரு முழு நேர எழுத்தாளரால்கூட இந்தளவுக்கு எழுத முடியுமா என்பது சந்தேகமே.
ஆனால், கலகம் செய்ய நிமிர்ந்துவிட்டவனுக்கு உதவி செய்வதே இலக்கியத்தின் பணி என்று மாக்சிம் கார்க்கி கூறியுள்ளார்.
அவர் ரஸ்சியப் புரட்சியை முன்னெடுக்க உலகப் பகழ் பெற்ற தாய் என்ற நாவலை எழுதி பெரும் பங்காற்றியவர்.
அதன் அடிப்படையில் தன்னை ஒரு இடதுசாரி எழுத்தாளராக அடையாளப்படுத்தும் யமுனா ராஜேந்திரன் அவர்களின் எந்த எழுத்துக்கள் போராட்டத்தை முன்னெடுக்க உதவியாய் அமைகின்றன என்பதே இங்கு நான் எழுப்பும் கேள்வியாகும்.
தனது எந்த எழுத்து எந்தப் போராட்டத்தை முன்னெடுக்க உதவியிருக்கிறது என்பதை யமுனா ராஜேந்திரன் அவர்களோ அல்லது அவரது நூலை விமர்சித்தவர்களோ சுட்டிக் காட்டத் தவறியுள்ளனர்.
யமுனா ராஜேந்திரன் ஒரு இந்திய தமிழர். அவர் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு பற்றி எழுத வேண்டியவர்.
அதை எழுதாவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவில் ஈழ அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தாவது எழுதியிருக்கலாம்.
கிட்லரின் சித்திரவதை முகாம்களில் யூத மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எழுதுபவர் தமிழகத்தில் சிறப்புமுகாம்களில் ஈழ தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடு:மைகள் குறித்து ஏனோ எழுதாமல் தவிர்க்கிறார்.
மாக்ஸ் லெனின,; ஸ்டாலின், மாசே துங் போன்ற மாபெரும் ஆசான்கள் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை தமிழில் பரப்புவதற்கே அவர் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறார்.
இதன்மூலம் அவர் என்னத்தைச் சாதிக்க விரும்புகிறார்?
No comments:
Post a Comment