•எமது தலைவர்களும் அவர்களது பிள்ளைகளும்
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் - இது பழமொழி
ஊரான் பிள்ளையை கெடுத்துவிட்டு தன் பிள்ளையை ஊட்டி வளர்ப்பது -இது புதுமொழி
தமிழ் தலைவர்களின் ஒருவரான சிவசிதம்பரம் அவர்களின் மகன் சக்தியென்றன் லண்டனில் கடந்தவாரம் காலமானார்.
1977ல் தேர்தலில் தமிழர்விடுதலைக் கூட்டணி பெரு வெற்றி பெற்தையடுத்து வல்வெட்டித்துறை கடற்கரையில் வெற்றிவிழாக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய தமிழர்விடுதலைக் கூட்டணித் தலைவரான சிவசிதம்பரம் அவர்கள் “தமிழீழத்திற்கு மக்கள் அங்கீகாரம் தந்துவிட்டார்கள்.
எனவே நாம் இனி தமிழீழத்தை போராடி பெற வேண்டும். அதற்கு 5000 இளைஞர்கள் உடனடியாக வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.
இளைஞர்களை போராட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்த சிவசிதம்பரம் தனது மகனை மட்டும் லண்டனுக்கு பத்திரமாக அனுப்பி படிக்க வைத்தார்.
லண்டனுக்கு படிக்க வந்த மகன் லண்டன்வாசியாக மாறிவிட்டார் அவர் ஒருபோதும் லண்டனில் தமிழர் போராட்டங்களில் கலந்துகொண்டது கிடையாது.
சிவசிதம்பரத்தின் மகள் இந்தியாவில் படிக்க வைக்கப்பட்டார்;. பின்பு அவர் இந்தியாவில் திருமணம் புரிந்து அவரும் இந்தியவாசியாக மாறிவிட்டார்.
தரப்படுத்தலுக்கு எதிராக மாணவர்களை போராட வைத்தவர் இன்னொரு தலைவர் அமிர்தலிங்கம்.
அவரும்கூட தனது மகன் பகிரதனை இந்தியா கொண்டு சென்று மருத்துவக்கல்வி கற்க வைத்தார்.
மருத்துவ கல்வி கற்ற அந்த மகன் பகிரதன் தற்போது லண்டனில் டாக்டராக குடும்பத்துடன் வசதியாக வாழ்கிறார்.
ஊரான் பிள்ளையை போராட அழைத்துவிட்டு தன் பிள்ளைகளை மட்டும் படிக்கவைத்த எம் தலைவர்களை என்னவென்று அழைப்பது?
No comments:
Post a Comment