•பாரத் மாதாகி ஜே!
முன்னாள் பாஜ.க அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் அக்கௌன்ட் வழக்கு காரணமாக 4வருஷமா முடங்கியிருக்கு
கருப்புபணம் எவ்வளவு இருந்தாலும் இப்ப மாற்ற முடியாது என்று மோடி கூறுகிறார்.
அப்புறம் எப்படி 650கோடி ரூபாவில் மகளுக்கு கலியாணம் நடத்துகிறார் ரெட்டி?
கலியாணத்தில டான்ஸ் ஆடிய சினிமா நடிகைக்கு ஒரு கோடிரூபா
வெத்தலை பாக்கு செலவு மட்டுமே 50இலட்சம் ரூபாவாம்.
ஹாஸ்பிட்டல்ல 500ரூபாய் இல்லனு பச்ச புள்ள செத்துப்போயிருக்கு.
இந்தாள் எப்படி 500கோடில கல்யாணம் பண்ணினார் என்று யாரும் கேட்க மாட்டார்களா?
இப்படித்தான் முன்னர் ஒரு ரூபா சம்பளம் வாங்கிய ஜெயா அம்மையாரும் தனது வளர்ப்பு மகன் சுதாகருக்கு ஆடம்பரமாக கலியாணம் நடத்தினார்.
அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்ட வருமான வரித்துறை ஜனாhத்தனம் ரெட்டிக்கு என் இன்னும் நோட்டீஸ் அனுப்பவில்லை?
அனில் அம்பானிக்கு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் 1,21,000 கோடி. அதற்கு ஆண்டு வட்டி 8299 கோடி.
ஆனால் அனில் அம்பானியுடைய நிறுவனங்களின் ஒரு ஆண்டுக்கான வருமானம் வெறும் 9848 கோடிதான்.
அரசியல்வாதிகளின் செல்வாக்கு இன்றி அம்பானியால் இவ்வளவு கடனை வாங்கியிருக்க முடியுமா?
தமக்கு வேண்டிய முதலாளிகளுக்கு அளவுக்கு மீறிய கடளைக் கொடுப்பது. பின்னர் சிறிது காலத்தின் பின்னர் வராக் கடன் என்று கூறி தள்ளுபடி செய்வது. இப்படித்தான் மோடி அரசும் 7200 கோடி ரூபா கடனை தற்போது ரத்து செய்துள்ளது.
இன்று ஸ்டேட் பேங்க் செய்த கடன் தள்ளுபடியில் மல்லையாவை விட மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர் மத்திய பிரதேசத்தைச் சார்ந்த "ரமேஷ் சந்த் கார்க்" என்பவர் தான்..
2010 ஆண்டு நடந்த வருமானவரி சோதனையின் போது வரி ஏய்ப்பு செய்தது காரணமாக கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு 156 கோடி அபராதம் கட்டினார் இந்த ரமேஷ் சந்த் கார்க்.
இன்று அந்த ரமேஷ் சந்த் கார்க்கின் 596 கோடி கடனையும் சேர்த்து தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.. இதில் என்ன கவனிக்கப்பட வேண்டியது என்கிறீர்களா?
ரமேஷ் சந்த் கார்க் மத்திய பிரதேச பிஜேபியின் வர்த்தகப் பிரிவு தலைவர். வருமானவரி ஏய்ப்பு செய்த அடுத்த வருடத்தில் தான் அவரை அம்மாநில வர்த்தகப் பிரிவு தலைவராக்கியது பாரதிய ஜனதா கட்சி.
மோடி முதலாளிகளின் நலனுக்காகவே அனைத்தையும் செய்கிறார் என்று இவற்றை நாம் சுட்டிக்காட்டினால் உடனே நமக்கு தேசபக்தி இல்லை என்று குற்றம் சுமத்துகிறார்கள் மோடியின் விசுவாசிகள்.
எதற்கு வம்பு?, நாமும் சொல்லி வைப்போம். “பாரத் மாதாகி ஜே!”
No comments:
Post a Comment