•முட்டாள்தனத்தை போதிக்க யாருக்கும் உரிமை இல்லை!
செய்தி- ஆயுதப் போராட்டம் பயன்தராது. இனி புத்தியை பயன்படுத்துவோம்.- கிழக்குமாகாண விவாசாய அமைச்சர் துரைராஜசிங்கம்
ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கியெறியும் பலாத்கார நிகழ்வே புரட்சி என்றார் மாபெரும் ஆசான் காரல் மாக்ஸ்
முதலாளித்துவ அரசு இயந்திரத்தை வன்முறையால் தூக்கியெறியாமல் எந்தவொரு அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்றார் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் சண்முகதாசன்.
ஆனால் ஆயுதப் போராட்டம் பயன் அற்றது. இனி புத்தியை பயன்படுத்துவோம் என்கிறார் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம்.
புலிகள் போரில் வெல்லவில்லை என்பதற்காக ஆயுதப் போராட்டம் பயன் அற்றது என்று எவ்வாறு இவரால் கூறமுடிகிறது?
ஜ.p.ஜி பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் போன்ற புத்திசாலிகளால் ஏன் தீர்வைப் பெற முடியவில்லை? அவர்கள் தங்கள் புத்தியை பயன்படுத்தவில்லையா?
இவர்களால் பெறமுடியாத தீர்வை தன்னால் எப்படி பெறமுடியும் என துரைராஜசிங்கம் நம்புகிறார்? ஒருவேளை இவர்களை விட தன்னை புத்திசாலியாக நினைக்கிறாரா?
கிழக்குமாணத்தில் வந்து இருந்துகொண்டு ஒரு பிக்கு தமிழர்கள் எல்லாம் புலிகள். அவர்களை சுட்டுக்கொல்வேண் என்று பகிரங்கமாக கூறுகிறார். அந்த பிக்குவை எதுவும் செய்ய முடியாத இந்த அமைச்சர் எப்படி தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தரப் போகிறார்?
தனக்கு பதவி பெறவும் அதன்மூலம் சொகுசு வாகனம் இறக்குமதி செய்யவும் மக்களை ஏமாற்றவும் தனக்கு புத்தி இருக்கிறது என்பதையா இந்த விவசாய அமைச்சர் கூறுகிறார்?
அவர் முட்டாளாக இருக்க அவருக்கு பூரண உரிமை உண்டு. ஆனால் மக்களை முட்டாளாக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை.
No comments:
Post a Comment