•கைநாட்டு அரசு!
தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் அப்பலோ மருத்துமனையில் அட்மிட்டாகி 50 நாட்களை கடந்துவிட்டார்.
காவிரிப் பிரச்சனையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. ஆப்போது ஜெயா அம்மையார் எந்த அறிக்கையும் விடவில்லை.
தற்போது ரூபாய் நோட்டுப் பிரச்சனையிலும் நாடு முழுவதும் மக்கள் கஸ்டப்படுகிறார்கள். அது குறித்தும் ஜெயா அம்மையார் எந்த அறிக்கையும் விடவில்லை.
ஈழத்து தலைவர்கள் காசி ஆனந்தன், திருநாவுக்கரசு போன்றவர்கள் அப்பலோ மருத்துவமனை வாசல்வரை சென்று ஜெயா அம்மையார் நலன் வேண்டி பிரார்த்தனை செய்தும்கூட பல்கலைக்கழக மாணவர் இருவர் சுடப்பட்டமை குறித்து இந்த அம்மையார் கண்டன அறிக்கை எதுவும் விடவில்லை.
ஆனால் தற்போது மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவித்தவுடன் தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு ஜெயா அம்மையார் அறிக்கை விடுகிறார்.
அதுமட்டுமல்ல இதுவரை பல்வேறுபட்ட அரசுகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போதுதான் முதன் முதலாக கைநாட்டு அரசு ஒன்றை தமிழ்நாட்டில் அறிகிறோம்.
இன்னும் என்னென்ன கூத்துகளை தமிழக மக்கள் காண வேண்டி வருமோ தெரியவில்லையே!
No comments:
Post a Comment