•ஏன் தோழர் சண்முகதாசன் மீது திரிபுவாதிகள்
தொடர்ந்தும் அவதூறு பொழிகிறார்கள்?
தொடர்ந்தும் அவதூறு பொழிகிறார்கள்?
தோழர் சண்முகதாசன் மரணமடைந்து சுமார் 25 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும்கூட திரிபுவாதிகள் தோழர் சண்முகதாசன் மீது அவதூறு பொழிகிறார்கள்.
காலம் சென்ற விசுவானந்ததேவனை நினைவு கூறுவதாக நினைவு மலர் வெளியிட்டவர்கள் சுய புராணம் பாடியது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் தோழர் சண்முகதாசன் மீது அவதூறு செய்துள்ளார்கள்.
இலங்கையின் புரட்சி வரலாற்றில் தோழர் சண்முகதாசன் அளவிற்கு திரிபுவாதிகளால் விமர்சிக்கப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை என்றே கூறவேண்டும்.
இதற்கு காரணம் திரிபுவாதிகளுக்கு தோழர் சண்முகதாசன் போல் மரண அடி கொடுத்தவர்கள் வேறு யாரும் இல்லை.
இலங்கையில் முதலாளித்துவக் கட்களுக்கு மட்டுமல்ல இடதுசாரிக் கட்சிகளுக்கும்கூட பணக்காரக் குடும்பத்தில் பிறந்து லண்டனில் கல்வி கற்றவர்களே தலைவராக வரமுடியும் என்பதை முறியடித்தவர் தோழர் சண்முகதாசன்
சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவராகி தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் மதிப்பை மட்டுமல்ல சர்வதேச புரட்சிகர சக்திகளின் மதிப்பையும் பெற்ற தலைவர் தோழர் சண்முகதாசன்.
மாவோயிச சிந்தனைகள் என்னும் புரட்சிகர தத்தவத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தி திரிபுவாதிகளுக்கு மரண அடியைக் கொடுத்தவர் தோழர் சண்முகதாசன். அதனால்தான் இன்றும்கூட அவர்கள் தோழர் சண்முகதாசன் மீது அவதூறு பொழிகிறார்கள்.
இலங்கையில் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்ட மக்கள் யுத்தப் பாதையை முன்வைத்தவர் தோழர் சண்முகதாசன்.
அவர் கூறுகிறார், “இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக் கோப்புக்குள் எந்த கட்சியும் அல்லது எந்தக் கட்சிக் கூட்டணியும் அதிகாரத்;திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே செயற்படும். அடக்குமுறையான பூர்சுவா வர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது”
இலங்கையில் ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் இளைஞர்களை “பொடியன்கள்” என்று அமிர்தலிங்கமும் “பயங்கரவாதிகள்” என்று ஜே.ஆர் ஜெயவர்த்தனவாவும் கூறிக்கொண்டிருந்த காலத்தில் முதன் முதலில் அவர்களை “போராளிகள்” கூறி அழைத்தவர் தோழர் சண்முகதாசன்.
இலங்கையில் ஆயுதம் ஏந்திப் போராடிய அனைத்து தமிழ் அமைப்புகளாலும் அவர் மதிக்கப்பட்டார். அவர் மரணம் அடையும்வரை அவரிடம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆலோசனை பெற்ற இயக்க தலைவர்கள் பலரை நாம் அறிவோம்.
தோழர் சண்முகதாசன் தன்மீதான விமர்சனங்களுக்கு “ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் தனது நூலில் பதில் அளித்துள்ளார். ஆனால் அவர் மீது அவதூறு பொழிவோர் தமது சுயவிமர்சனங்களை முன்வைக்க மறுக்கிறார்கள்.
தோழர் சண்முகதாசன் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் அமைச்சுப் பதவிகளை பெற்றிருக்க முடியும். பல சலுகைகளை அனுபவித்திருக்க முடியும். ஆனால் அவர் இறுதிவரை தமது கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் உறுதியாகவே வாழ்ந்தார்.
தோழர் சண்முகதாசன் வாழ்க்கை வரலாறு என்பது இலங்கை இடதுசாரி வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. பிரிக்க முடியாதது. எனவே அவர்மீதான விமர்சனம் என்பதும் பொறுப்பு மிக்கதாக இருத்தல் வேண்டும்.
ஆனால், கிட்டுவுக்கு கிரனைட் எறிந்தவரும், புலிகளுக்கு காட்டிக் கொடுத்து தப்பி வந்தவரும், கொள்ளையடித்த வங்கிப் பணத்தில் வெளிநாடு வந்தவரும், புரட்சிக்கு எந்த அர்ப்பணிப்பும் செய்யாதவரும், விமர்சனம் என்ற போர்வையில்; தோழர் சண்முகதாசன் மீது அவதூறு செய்வது ஓவராக தெரியவில்லையா?
No comments:
Post a Comment