•பனையால விழுந்தவனை மாடு ஏறி மிதிச்ச
கதையாக அல்லவா இது இருக்கு!
கதையாக அல்லவா இது இருக்கு!
போர் தந்த வலியில் இருந்து வன்னி மக்கள் இன்னும் மீளவில்லை.
தினமும் சாப்பாட்டுக்கே அவர்கள் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள்.
தினமும் சாப்பாட்டுக்கே அவர்கள் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள்.
கடன் சுமை தாங்க முடியாமல் அல்லல் படுகிறார்கள்.
வட்டியைக்கூட கட்ட முடியாமலே பலர் தற்கொலை செய்கிறார்கள்.
வட்டியைக்கூட கட்ட முடியாமலே பலர் தற்கொலை செய்கிறார்கள்.
அண்மையில்கூட தாய் ஒருவர் வறுமையின் கொடுமை தாங்கமுடியாமல் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளதாக செய்திகள் வந்தள்ளன.
இந்த நிலையில் சப்பாத்து போட்டு வரவில்லை என்று 24 மாணவர்களின் செருப்புகளை முட்டாள் அசிரியர் ஒருவர் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் எரித்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
மாணவன் செருப்பு போட்டு வருகிறானா அல்லது சப்பாத்து போட்டு வருகிறானா என்பது முக்கியம் இல்லை. மாறாக அவன் படிக்க வருகிறானா என்பதே முக்கியம்.
அதேபோல் படிக்க வந்த மாணவனுக்கு முறையாக கல்வி கற்றுக் கொடுப்பதிலேயே அசிரியரும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால் வன்னியில் சில ஆசிரியர்கள் கல்வி கற்றுக்கொடுப்பதைவிட மாணவிகளுக்கு சேட்டைவிட்டு ஊர் மக்களிடம் தர்ம அடி வாங்குபவர்களாகவே இருக்கிறார்கள்.
பெற்றேர்ர்களைப் பொறுத்தவரையில் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியிலும் தமது பிள்ளைகளை படிக்க அனுப்புவதே பெரிய காரியம்.
இந்த நிலையில் அவர்கள் தமது பிள்ளைகளுக்கு செருப்பு வாங்கி கொடுக்கவே எத்தனை சிரமப்பட்டிருப்பார்கள்?
அதனைப் புரிந்துகொள்ளாமல் சப்பாத்து போட்டு வரவில்லை என்று அவர்களின் செருப்பை எரிப்பது எத்தனை முட்டாள்தனம்?
சப்பாத்து போட்டுக்கிட்டு வா என்று திருப்பி அனுப்பியிருக்லாம். அதைவிடுத்து அவர்களின் செருப்பை எரிக்க இந்த முட்டாள் அசிரியருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
அரசு சம்பளனம் போதாது என்று ரியூசன் வேறு சொல்லிக் கொடுத்து ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்கும் அசிரியர்களுக்கு செருப்பின் விலை அற்பமாக தெரியலாம்.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் மக்களுக்கு செருப்பின் விலையும் அதிகமானதுதான். சப்பாத்து வாங்குவதும் சிரமம்தான்.
கடும் வெய்யில் பிரதேசத்தில் மாணவர்களுக்கு எதற்கு சப்பாத்து? இல்லை சப்பாத்துதான் அணிய வேண்டுமென்றால் புத்தகங்கள் கொடுப்பதுபோல், மதிய உணவு கொடுப்பதுபோல் அரசு செலவில் சப்பாத்துகளையும் வழங்குங்கள்.
மாகாண சபை என்ன செய்கிறது, கல்வி அமைச்சர் என்ன செய்கிறார்? எப்படி இந்த முட்டாள்தனங்களை அனுமதிக்கின்றார்கள்?
சீ… வெட்கமாக இருக்கிறது.
No comments:
Post a Comment