Thursday, August 31, 2017

•175 வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்!

•175 வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்!
தமது சொந்த நிலங்களை வழங்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் 175வது நாளாக போராடுகிறார்கள்.
178 மில்லியன் ரூபா பணத்தை தந்தால் இம் மக்களது நிலங்களை விடுவிப்பதாக ராணுவம் கூறுகிறது.
ராணுவத்திற்குரிய பணத்தை வழங்கி நிலத்தை மீட்டுத் தரவேண்டிய நல்லாட்சி அரசு அதுகுறித்து அக்கறையற்று இருக்கிறது.
ஆனால் அதேவேளை நேற்றையதினம் ஜனாதிபதி 300 மில்லியன் ரூபாவை தலதாமாளிகையில் தங்க கூரை போடுவதற்கு வழங்கியுள்ளார்.
புத்தர் பொன், பொருள,; அரசு அனைத்தையும் துறந்து துறவியானவர். அவருக்கு எதற்கு 300 மில்லியன் ரூபா தங்கத்தில் கூரை?
வோட்டு போட்ட மக்கள் இருப்பதற்கு நிலம் கேட்டு போராடுகிறார்கள். 175 நாளாக வீதியில் உறங்குகிறார்கள்.
ஆனால் இந்த கூமுட்டை ஜனாதிபதி புத்தருக்கு தங்ககூரை போடுகிறார். இவரை எளிமையான ஜனாதிபதி என்று வேற சொல்லிக் கொள்கிறார்கள்.
இதில் மிகப் பெரிய வருத்தம் என்னவெனில், இந்த மக்கள் றோட்டில் இப்படி போராடிக் கொண்டிருக்கையில் சுமார் 250 கோடி ருபா செலவில் நல்லூர் திருவிழாவை தமிழ் மக்கள் நடத்தி முடித்திருக்கிறார்கள்.
போராட்டத்திற்கு உயிர் பொருள் ஆவி என்று அனைத்தையும் கொடுத்த தமிழ் மக்கள், கேட்டிருந்தால் கேப்பாப்பிலவு உறவுகளுக்காக 178 மில்லியன் ரூபாவை வழங்கியிருக்க மாட்டார்களா?
நிச்சயமாக வழங்கியிருப்பார்கள். ஒரு நல்ல தலைமை முன்னின்று செயற்பட்டால் வாரி வழங்க தமிழ் மக்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.
தமிழ் மக்களிடம் பணம் இருக்கிறது
தமிழ் மக்களிடம் பதவி இருக்கிறது
தமிழ் மக்களிடம் நல்ல மனம் இருக்கிறது.
ஆனால் இப்போது தமிழ் மக்களுக்கு நல்ல தலைமை இல்லை.
இதுதான் தமிழ் மக்களுக்கு தற்போது உள்ள பெரிய குறை.

No comments:

Post a Comment