கரடியே காரித் துப்பிடிச்சு!
இந்தியனே தன்னை இந்து இல்லை என்கிறான்
எங்கட சில பெரிசுகள் இந்து தமிழீழம் கேட்கினம்
லிங்காயத்துகள் தங்களை இந்துமதம் என அழைக்கக்கூடாது என்றும் தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என லட்சக்கணக்கில் திரண்டு கோரியுள்ளனர்.
கர்நாடக அரசும் அவர்களின் கோரிக்கையை ஏற்று தனி மதமாக அறிவித்துள்ளது. அவர்களை இந்து மதமாக கருத முடியாது எனவும் கூறியுள்ளது.
அதேபோல் ஈழத் தமிழர்களும் சைவ சமயத்தவர்கள். அவர்களை இந்துமதமாக கருத முடியாது.
ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் சில ஈழப் பெரிசுகள் இந்திய உளவுப்டையை நம்பி இந்து தமிழீழம் கேட்கிறார்கள்.
அதுமட்டுமா அந்த உளவுப்படையின் வேண்டுகோள்படி ஈழத்தில் “சிவசேனை” அமைக்க முயல்கிறார்கள்.
கட்டையில் போகிற நேரத்தில் இந்த பெரிசுகளுக்கு ஏன் இந்த கோடரிக்காம்பு வேலை?
குறிப்பு-
இந்திய உளவுப்படைக்கு விசுவாசமாக செயற்பட்டு வருவதால் அடுத்த தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பாக மட்டக்களப்பில் சீட் வாங்கி தருவதாக காசி ஆனந்தன் அய்யாவுக்கு வாக்குறுதி தரப்பட்டுள்ளதாம்.
சாவதற்குள் ஒருமுறையாவது எம்.பி யாகி விடவேண்டும் என்பது அவரது நீண்டநாள் கனவாம்.
ஒருவேளை அவர் எம்.பி யானால்; “ பத்து தடவை பாடை வராது. சிரித்துக்கொண்டே களம் வாடா” என்ற தனது கவிதையை எப்படி பாராளுமன்றத்தில் மாற்றிப் பாடப் போகிறார்?
No comments:
Post a Comment