•நல்லுர் திருவிழா !
வருடா வருடம் மக்கள் கூட்டம் அதிகரிப்பது ஏன்?
வருடா வருடம் மக்கள் கூட்டம் அதிகரிப்பது ஏன்?
யுத்த நெருக்கடி காலத்தில் கூட இந்தளவு கூட்டம் வந்ததில்லை.
யுத்தம் முடிந்து 8 வருடங்களின் பின் கூட்டம் அதிகரிப்பது ஏன்?
மக்களுக்கு கடவுள் பக்தி அதிகரிக்கிறதா?
அல்லது
மக்களுக்கு தலைவர்கள் மீதான நம்பிக்கை குறைகிறதா?
அல்லது
ஒரு மன ஆறுதலுக்காக கோயிலுக்கு வருகிறார்களா?
அல்லது
தங்கள் ஆடம்பரத்தை காட்ட முனைகிறார்களா?
அமெரிக்க தூதுவர் கூட வந்த கூட்டத்தை பார்த்து ஆச்சரியப்பட்டதாக பெருமையாக போடுகிறார்களே. அது ஏன்?
ஒருபுறத்தில் பல கோடி செலவு செய்து திருவிழா கொண்டாடுகிறார்கள். மறுபுறத்தில் எமக்காக போராடியவர்கள் வாழ்வதற்காக பிச்சை எடுக்கிறார்கள்.
ஒருபுறத்தில் பல கோடி செலவு செய்து கோயில் கட்டுகிறார்கள். மறுபுறத்தில் கூரை கூட வேயாமல் பாடசாலை மழையில் ஒழுகிறது.
காணாமல் போனவர்களின் உறவுகள் 160 நாட்களுக்கு மேலாக போராடுகிறார்கள். இந்த கோயில் திருவிழாவுக்கு கூடிய கூட்டத்தில் ஒரு பாதிக் கூட்டமாவது அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாமே!
இதில் மிகவும் வருத்தம் என்னவெனில், வித்யா கொலை வழக்கில் குற்றவாளி சுவிஸ்குமாருக்கு உதவிய அமைச்சர் விஜயகலா பக்தர்களுக்கு சர்க்ரை தண்ணீர் வழங்குகிறார்.
அப்படியென்றால் எல்லா பாவத்தையும் செய்துவிட்டு திருவிழாவில் கந்தனுக்கு லஞ்சம் கொடுத்தால் அவர் மன்னித்து விடுவாரா?
மாணவி வித்யாவுக்கு கடவுள் கந்தன் நியாயம் வழங்கமாட்டாரா? மாணவி வித்யா குடும்பம் ஏதாவது லஞ்சம் (காணிக்கை) தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?
பக்தர்களே உங்கள் பதில் என்ன?
No comments:
Post a Comment