Thursday, August 31, 2017

ஈழத்து சேகுவாரா என்று பட்டம் பெற்றவன் நான்

•என்னை மாணவி வித்யா வழக்கில் விசாரணைக்கு அழைக்கிறார்களே. இது நியாயமா?
ஈழத்து சேகுவாரா என்று பட்டம் பெற்றவன் நான்
கனடாவில் உள்ள ஒருசில லூசுகளால் பவளவிழா கண்டவன் நான்
எனக்கு கொழும்பில் அரச பங்களா உண்டு
எனக்கு சென்னையில் ஒரு மாளிகை உண்டு
போதாக்குறைக்கு மாவிட்டபுரத்தில் ஒரு வீடு உண்டு
இப்படியிருக்க சுவிஸ் குமாரிட்ட
நான் கை நீட்டி பணம் வாங்குவேனா?
இதற்காக என்னை விசாரணைக்கு அழைப்பது
என்ன நியாயம்?
எங்கட கட்சி பிரமுகர் தமிழ்மாறன் இதில்
சம்பந்தப்பட்டிருப்பது உண்மைதான்.
இதுகுறித்து நான் எதுவும்கூறாமல்
கண்டும் காணாமல் இருப்பதும் உண்மைதான்.
அதற்காக என்னையும் வித்யா கொலை வழக்கில்
விசாரணைக்கு வா என்று அழைப்பதா?
மாவிட்டபுரத்தில் நான் கட்டிவரும்; வீட்டுக்கு
சுவிஸ்குமார் பணமா காரணம் என்று
நக்கலாக சிலர் கேட்கிறார்கள்.
இதைநான் வன்மையாக மறுக்கிறேன்.
நான் சுத்தமானவன் என்று சொல்ல வரல்ல
நானும் அப்படி இப்படி சில பிழைகள் விட்டவன்தான்
ஆனால் அதற்காக மாணவி வித்யா கொலையாளி
சுவிஸ் குமாரிடம் கை நீட்டி பணம் வாங்கும் அளவிற்கு
இன்னும் கேவலமாகி நான் போய்விடவில்லை.
தேர்தல் நிதியாக அவுஸ்ரேலியாவில் இருந்து
வந்த பணம் முழுவதையும் அப்படியே
லண்டனில் இருக்கும் எனது மகனுக்கு
வியாபாரத்திற்கு கொடுத்தேன்.
“நல்லாட்சி அரசு” அமைய பிரதமர் ரணில் தந்த பணத்தை
கணக்கு காட்டாமல் அமுக்கினேன்.
இந்திய அரசுக்கு காட்டி வரும் விசுவாசத்திற்காய்
அவர்கள் தரும் பணத்தையும் பெற்று வருகிறேன்.
இதற்கு மேலாக காங்கேசன் தொழிற்சாலை மற்றும் துறைமுகம்
திக்கம் வடிசாராய கம்பனிகளை பெற்றுக் கொடுத்து கமிசன் வாங்கினேன்.
இப்படி கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் நான்
போயும் போயும் சுவிஸ்குமாரின் பிச்சசைக் காசை பெறுவேனா?
விஜயகலாவும் தமிழ்மாறனும் தாங்கள் தப்புவதற்காக
என்னை இந்த வழக்கில் மாட்டப் பார்க்கிறார்கள்.
அவர்களை எச்சரிக்கிறேன். என்மீது கைவைத்தால்
மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்.
இப்படிக்கு
"வெடிகுண்டு முருகேசன்"
மாவை சேனாதிராசா

No comments:

Post a Comment