மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்துகளை கர்நாடக அரசு அகற்றியுள்ளது.
ஆனால் இந்தி படித்திருந்தால் கர்நாடகம் முன்னேறியிருக்கும் என்று பாணிப்பூரி விற்க வந்த எந்த பாண்டேயும் அங்கு கூறவில்லை.
இந்தி படித்தால் மட்டுமே கர்நாடகம் முன்னேற முடியும் என்று எந்தவொரு எஸ.வி. சேகரும் அங்கு கூறவில்லை.
இந்தி எழுத்துகளை நீக்கியதற்கு எந்தவொரு பார்ப்பண குருமூர்த்திகளும் அங்கு பொங்கி எழவில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்.
ஏனெனில் அது கர்நாடகம். இது தமிழ்நாடு. கர்நாடகவில் இருந்துகொண்டு கன்னடர்களுக்கு எதிராக பேசினால் உதை விழும்.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தாராளமாக தமிழனுக்கு எதிராக பேசலாம்.
அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழால் பிழைத்துக் கொண்டு கொஞ்சம்கூட கூச்சமின்றி தமிழ் இனத்திற்கு எதிராக இவர்கள் பேசுகின்றனர்.
இன்னும் எத்தனை நாளைக்கு இதை தமிழன் அனுமதித்துக்கொண்டிருக்கப் போகிறான்?
தமிழா இன உணர்வு கொள்!
No comments:
Post a Comment