•யாழ்ப்பாணத்தில்
ஜயர் இல்லாமல் கோயில் திருவிழா செய்ய முடியும்- ஆனால்
இந்திய தூதுவர் இல்லாமல் ஒரு விழா நடத்த முடியுமா?
ஜயர் இல்லாமல் கோயில் திருவிழா செய்ய முடியும்- ஆனால்
இந்திய தூதுவர் இல்லாமல் ஒரு விழா நடத்த முடியுமா?
இன்று யாழ்ப்பாணம் கரவெட்டியில் ஒரு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.
டென்மார்க் எழுத்தாளரின் நூல் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு கரவெட்டியில் இந்திய தூதுவரின் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூலுக்கும் இந்திய தூதுவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் தலைமையில் எதற்காக வெளியிடப்பட வேண்டும்?
அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும்கூட சம்பந்தம் கண்டு விடலாம். ஆனால் இந்த தூதுவருக்கும் நூலுக்கும் என்ன சம்பந்தம் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே.
யாழ்ப்பாணத்தில் எந்த விழாவாக இருந்தாலும் இந்திய தூதர் இன்றி நடத்தப்பட முடியாது என்பதையா இது காட்டுகிறது?
எந்த வீதியில் இந்திய தூதர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டுள்ளாரோ அதே வீதியில்தானே மெண்டல் பத்மநாதன் என்ற அப்பாவி சுடப்பட்டார்
அமைதிப்படை என்று வந்த இந்திய ராணுவம் மெண்டல் பத்மநாதன் என்ற மனநோயாளியை சுட்டுக் கொன்றது மட்டுமன்றி அவரை புலிகளின் மிகப்பெரிய தளபதி என்றும் பொய் கூறியது.
இதே கரவெட்டியில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்?
இதே கரவெட்டியில் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்?
இதே கரவெட்டியில் இந்திய ராணுவத்தால் சேதமாக்கப்பட்ட தமிழர் சொத்துக்கள் எவ்வளவு?
அத்தனையும் மறந்துவிட்டு எப்படி இந்திய தூதுவரை வரவேற்க முடிகிறது?
அல்லது, அத்தனையும் மறந்துவிட்டு எதற்காக இந்திய தூதுவரை வரவேற்க வேண்டும்?
இந்திய ராணவத்திடம் பூவரசம் கட்டையால் அடி வாங்கியவரே இந்திய தூதுவரை முன்நின்று வரவேற்கிறாரே. அப்படியென்ன நிர்ப்பந்தம் வந்துவிட்டது அவருக்கு?
No comments:
Post a Comment